தமிழ்நாடு

tamil nadu

வடமாநில பெண்ணிடம் வழிப்பறி செய்த 2 பேர் கைது! ஒருவர் தலைமறைவு

By

Published : May 10, 2019, 6:08 PM IST

சென்னை: கண் சிகிச்சைக்காக, ஆட்டோவில் பயணித்த வடமாநில பெண்ணிடம் வழிப்பறி செய்த இரண்டு நபர்களை பெரியமேடு காவல் துறையினர் கைது செய்தனர்.

ஆட்டோவில் வடமாநில பெண்ணிடம் வழிப்பறி செய்த இரண்டு நபர் கைது

மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் சிபானி மன்டி (55). இவர் கண் சிகிச்சைக்காக தனது உறவினர் இருவருடன், நேற்று முன்தினம் ஹவுரா ரயில் மூலம் சென்னை வந்துள்ளார். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து நுங்கம்பாக்கம் சங்கர் நேத்ராலயா மருத்துவமனைக்கு ஆட்டோவில் சென்றுள்ளார்.

அப்போது, ஆட்டோ பெரியமேடு ஈவிஆர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத மூன்று பேர், ஆட்டோவில் ஓரமாக அமர்ந்து இருந்த சிபானி மன்டியின் கைப்பையை பறித்துச் சென்றனர். அதில் 20 ஆயிரம் ரூபாய் பணமும், மூன்று ஏடிஎம் கார்டுகளும் இருந்துள்ளன. இது குறித்து பெரியமேடு காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.

ஆட்டோவில் வழிப்பறி செய்த மூன்று மர்ம நபர்கள்

இந்நிலையில், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த இருவரை பெரியமேடு காவல் துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர்களின் பெயர் தமிழ்செல்வன், சீனிவாசன் என்பது தெரியவந்துள்ளது. மேலும், அருண்குமார் என்பவர் தலைமறைவாகி உள்ளதால், காவல்துறையினர் அவரை வலை வீசி தேடி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details