தமிழ்நாடு

tamil nadu

பி.இ, பி.டெக் படிப்பில் சேர 1.22 லட்சம் மாணவர்கள் பதிவு

By

Published : Aug 6, 2021, 9:30 PM IST

பி.இ, பி.டெக் படிப்பில் சேர்வதற்கான கலந்தாய்வில் கலந்து கொள்வதற்காக, விண்ணப்பம் வெளியிடப்பட்ட 11 நாள்களில், 1 லட்சத்து 22 ஆயிரத்து 699 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர்.

பி.இ, பி.டெக் படிப்பில் சேர 1.22 லட்சம் மாணவர்கள் பதிவு
பி.இ, பி.டெக் படிப்பில் சேர 1.22 லட்சம் மாணவர்கள் பதிவு

சென்னை:பொறியியில் படிப்புகளில் சேர கடந்த ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 24 ஆம் தேதி வரையில் www.tneaonline.org, www.tndte.gov.in என்ற வலைதள முகவரிகளின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

பி.இ, பி.டெக் படிப்பில் சேர 11 நாள்களுக்கு முன்னர் ஆன்லைனில் விண்ணப்பம் வெளியிடப்பட்டது. இன்று (ஆக.6) மாலை 5.30 மணி வரையில், 1 லட்சத்து 22 ஆயிரத்து 699 மாணவர்கள் பொறியியல் கலந்தாய்வில் கலந்து கொள்ள ஆன்லைன் வழியாக பதிவு செய்துள்ளனர்.

மேலும் கலந்தாய்வில் பங்கேற்க 91 ஆயிரத்து 461 மாணவர்கள் கட்டணம் செலுத்தியுள்ளனர். 72 ஆயிரத்து 396 மாணவர்கள் தங்கள் சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்துள்ளனர்.

இதையும் படிங்க:மாணவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று கல்வி கற்பிக்கும் ஆசிரியர்!

ABOUT THE AUTHOR

...view details