ETV Bharat / state

மாணவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று கல்வி கற்பிக்கும் ஆசிரியர்!

author img

By

Published : Aug 6, 2021, 7:59 PM IST

ஒருவரின் உடைமைகளைப் பறிகொடுத்தாலும், சேர்த்து வைத்த செல்வம் போனாலும், அவர் கற்ற கல்வி எப்போதும் உதவும் என்பதற்கேற்ப அக்கல்வியின் சிறப்பை உணர்ந்து செயலாற்றி வருகிறார் சேலத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர்.

மாணவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று கல்வி கற்பிக்கும் ஆசிரியர்
மாணவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று கல்வி கற்பிக்கும் ஆசிரியர்

சேலம்: கரோனா பரவல் காரணமாக பள்ளிகள் பல மாதங்களாக திறக்கப்படவில்லை. தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் கல்வி கற்பிக்கின்றனர்.

பெரும்பாலும் பொருளாதாரத்தில் நலிவடைந்த மாணவர்கள் அரசுப்பள்ளியை அணுகும் சூழலில் இப்பெருந்தொற்று காலம் அவர்களின் எதிர்கால கல்வி நிலையை கேள்விக்குறியாக்கி உள்ளது.

அரசுப்பள்ளி மாணவர்களின் நலன்

இந்நிலையில் மாணவர்கள் குறிப்பாக அரசுப்பள்ளி மாணவர்களின் கல்வி நலன் கருதி அவர்கள் இருக்கும் இடத்திற்குகே சென்று கல்வி கற்பித்து வருகிறார் சேலத்தைச் சேர்ந்த அரசுப்பள்ளி ஆசிரியர் தெய்வநாயகம்.

மாணவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று கல்வி கற்பிக்கும் ஆசிரியர்

சேலம் பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இடை நிலை ஆசிரியராகப் பணியாற்றி வரும் இவர் கடந்த வருடம் முதலே இந்தப் பணியை செய்து வருகிறார். பல கிராமங்களைச் சேர்ந்த ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் ஏறக்குறைய 80 மாணவர்கள் இவரிடம் கல்வி பயில்கின்றனர்.

பலருக்கு எடுத்துக்காட்டு

கரும்பலகை இல்லை ஆனால் கவலை இல்லை, இரும்பு தடுப்பை பலகையாக மாற்றி பாடம் நடத்துகிறார். மாணவர்களில் கல்வி எச்சூழலிலும் தடைபட்டு விடக் கூடாது என்று உறுதியுடன் செயல்படுகிறார்.

இவரின் இச்செயல் ஆகச் சிறந்த ஒரு ஆரம்பப்புள்ளி. பல ஆசிரியர்களுக்கு முன்னுதாரணமாக விளங்குகிறார். இவ்வழி முறைகள் புதிதல்ல என்றாலும் மாணவர்களின் கல்வியைக் கருத்தில் கொண்டு குறிப்பாக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இச்சேவை அத்தியாவசியமானதாகும்.

இதையும் படிங்க: கரோனா காலத்தில் பணியாற்றாத ஆசிரியர்களுக்கு விருது இல்லை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.