தமிழ்நாடு

tamil nadu

செங்கல்பட்டில் கள்ளநோட்டு அச்சடித்த இருவர் கைது

By

Published : Aug 31, 2021, 5:30 AM IST

Chengalpattu
Chengalpattu ()

செங்கல்பட்டு அருகே கள்ளநோட்டு கும்பலை கைதுசெய்து, அவர்களிடமிருந்து ரூ.5 லட்சம் போலி 500 ரூபாய் கள்ளநோட்டுகள் மற்றும் ஜெராக்ஸ் மிஷின் பறிமுதல் செய்யப்பட்டன.

செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம் புலிப்பாக்கம் பகுதியில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள பாபு என்பவரது வீட்டை அதே பகுதியை சேர்ந்த ரகு என்பவர் மாமண்டூர் பகுதியை சேர்ந்த ராஜ் (வயது 52 ) மற்றும் எபினேசர் (வயது 27) ஆகியோருக்கு கடந்த 7 மாதங்களுக்குமுன்பு வாடகைக்கு எடுத்து கொடுத்துள்ளார்.

ஆனால் வீட்டில் யாரும் இருப்பதில்லை, தொடர்ந்து அன்று முதல் இன்று வரை வீடு பூட்டியே இருப்பதாலும் இதுவரை வாடகை தராததாலும் சந்தேகமடைந்த வீட்டின் உரிமையாளர் பாபு செங்கல்பட்டு தாலுகா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்தப் புகாரின் அடிப்படையில் ராஜ் மற்றும் எபினேசருக்கு போலீசார் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வீட்டின் வாடகையை கொடுங்கள் இல்லையெனில் வீட்டை காலிசெய்து உரிமையாளரிடம் ஒப்படைத்து விடுங்கள் என எச்சரித்துள்ளனர்.

இதையடுத்து ராஜ் மற்றும் எபினேசர் இருவரும் அவசர அவசரமாக வீட்டை காலி செய்துள்ளனர். இதையறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது அங்கு ரூ.3 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ஜெராக்ஸ் மிஷின் மற்றும் கள்ளநோட்டுகள் அடிப்பதற்கான உபகரணங்கள், ரூ.5 லட்சத்திற்கான போலி 500 ரூபாய் நோட்டுக்கள் சிக்கின.

இவை அனைத்தையும் கைப்பற்றிய போலீசார் ராஜ், எபினேசர் இருவரையும் கைதுசெய்து அவர்களிடம் திவிர விசாரணை நடத்தி வருகிறார்.

இதையும் படிங்க :கலர் ஜெராக்ஸில் கள்ள நோட்டு அச்சடித்த இருவர் கைது

ABOUT THE AUTHOR

...view details