தமிழ்நாடு

tamil nadu

கல்லூரி மாணவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி.. 6 பேரை அதிரடியாக கைது செய்த சென்னை போலீஸ்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 7, 2023, 2:05 PM IST

Chennai city police: கல்லூரி மாணவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் மற்றும் பணம் பறித்த 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

செல்போன் பறித்த  6 பேர்  கைது
செல்போன் பறித்த 6 பேர் கைது

சென்னை:கல்லூரி மாணவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் மற்றும் பணம் பறித்த 6 பேரை கைது செய்துள்ள காவல்துறையினர் அவர்களிடமிருந்து 18 செல்போன்கள் மற்றும் 2 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம், தாழம்பூர் அடுத்த மேலகோட்டையூரில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வியியல் பல்கலைக்கழகத்தில் படித்து வருபவர் கிஷோர்(18), இவரும் இவரது இரண்டு நண்பர்களும் சேர்ந்து, மேலகோட்டையூர், ஊத்துகுழி மதுக்கடை அருகே உள்ள ஏரியில் மீன் பிடிப்பதை பார்க்க கடந்த 2ம் தேதி சென்றுள்ளார்.

இதையும் படிங்க:பட்டப்பகலில் கொள்ளை.. ஆளில்லா நேரத்தில் அரங்கேறிய நகை திருட்டு! பலே திருடனை காட்டிக் கொடுத்த சிசிடிவி!

அப்போது மீன் பிடிப்பதை பார்த்து விட்டு அங்கேயே அமர்ந்து பேசிக் கொண்டிருந்த போது அருகில் மதுக்கடையில் மது குடித்துக் கொண்டிருந்த கும்பல் ஒன்று கல்லூரி மாணவரிடம் பேசி விட்டு தருவதாக செல்போன் கேட்டுள்ளார். பின்பு கும்பலில் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி 3 செல்போன்களையும், 400 ரூபாய் பணத்தையும் பறித்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் ஏறி தப்பிச் சென்று விட்டனர்.

இது குறித்து கல்லூரி மாணவர்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் தாழம்பூர் ஆய்வாளர் வேலு, சம்பவ இடம் சென்று விசாரணை செய்து வழி நெடுகிலும் இருக்கும் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையர்களை அடையாளம் கண்டு வெங்கம்பாக்கத்தில் வைத்து 6 பேரை கைது செய்தனர்.

விசாரணையில் அவர்கள் வெங்கம்பாக்கத்தை சேர்ந்த செல்வகுமார் (எ) சிட்டிங்கா(23), சூர்யா(19), மோகன்(எ)வல்லரசு(24), அபினேஷ்(எ)பாபு(19), சூர்யா(21), தமிழ்செல்வன்(19), என்பது தெரியவந்தது. அவர்களிடமிருந்து இரண்டு இருசக்கர வாகனங்கள், மற்றும் 18 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க :Palladam Murder case: 4 பேர் கொலை வழக்கு.. முக்கிய நபர் சுட்டுப்பிடிப்பு - போலீசார் தகவல்!

ABOUT THE AUTHOR

...view details