தமிழ்நாடு

tamil nadu

மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது!

By

Published : May 30, 2020, 5:31 PM IST

அரியலூர்: காத்தான்குடிகாடு கிராமத்தில் பள்ளி மாணவியை பாலியல் வன்புணர்வு செய்த இளைஞரை காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைதுசெய்தனர்.

மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது
மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது

அரியலூர் மாவட்டம் காத்தான்குடிகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் கருணாநிதி. இவரின்‌ மகள் அருகில் உள்ள அம்பாப்பூரில் 11ஆம் வகுப்பு படித்துவருகிறார்.

இவர், கடந்த ஜனவரி மாதம் தனியாக காட்டுப்பகுதிக்குச் சென்றுள்ளார். அப்போது, அவரை பின்தொடர்ந்து சென்ற அப்பகுதியைச் சேர்ந்த பரமசிவம் என்ற இளைஞர் மாணவியை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.

பின்னர், இது குறித்து மாணவி அவரது வீட்டில் தெரிவித்துள்ளார். ஆனால், இந்த விவகாரம் வெளியில் தெரிந்தால் அவமானம் என்று எண்ணி மறைத்துவிட்டனர். இந்நிலையில், மாணவி ஐந்து மாதம் கர்ப்பமானார்.

இதை கலைப்பதற்காக அரியலூர் அரசு தலைமை மருத்துவமனைக்குச் சென்றுள்ளனர். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தற்போது ஐந்து மாத கர்ப்பினியாக உள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் சந்தேகமாகவுள்ளது எனக் கூறி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து, மருத்துவமனைக்கு வந்த அரியலூர் மகளிர் காவல் நிலைய காவல் துறையினர், மாணவியிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர் பாலியல் வன்புணர்வு செய்தது தெரியவந்தது.

இதையடுத்து, மாணவியின் கிராமத்திற்குச் சென்ற காவல் துறையினர், பரமசிவத்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைதுசெய்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: சிறுமி பாலியல் வன்கொடுமை - ஒருவர் கைது

ABOUT THE AUTHOR

...view details