தமிழ்நாடு

tamil nadu

கோவிட் துயரிலிருந்து மக்களை மீட்டுள்ளீர்கள்: குடியரசு தலைவர்

By

Published : Aug 14, 2021, 10:32 PM IST

Updated : Aug 15, 2021, 8:03 AM IST

கரோனா பெருந்தொற்று காலத்தில் துவண்டு கிடந்த மக்களுக்கு, நீங்கள் வென்ற பதக்கங்கள் புத்துணர்வை அளித்துள்ளன என ஒலிம்பிக்கில் பதக்கம் வாங்கிய வீரர்களிடம் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.

குடியரசு தலைவர், president, indian olympic contigents, rashtrapati bhavan cultural centre
குடியரசு தலைவர்

டெல்லி: நடந்து முடிந்த 2020 டோக்கியோ ஒலிம்பிக் பங்கேற்ற இந்திய வீரர்களின் குழுவை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று (ஆக. 14) மாலை சந்தித்து உரையாடினார். இந்தச் சந்திப்பு ராஷ்ட்ரபதி பவன் கலாசார மையத்தில் நடைபெற்றது.

முன்னதாக, இந்திய நட்சத்திர வீராங்கனைகளான மேரி கோம், பி.வி. சிந்து, மீராபாய் சானு ஆகியோர் ரசிகர்களைச் சந்தித்து வந்தனர். அது குறித்த புகைப்படங்கள், காணொலிகளை இந்திய விளையாட்டு ஆணையம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

130 கோடி இந்தியர்களின் வேண்டுதல்

இதையடுத்து, ஒலிம்பிக் வீரர்களிடம் உரையாற்றிய ராம்நாத் கோவிந்த்,"நீங்கள் நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளீர்கள். இந்த அணிதான் ஒலிம்பிக்கில் அதிக பதக்கத்தை பெற்றுத் தந்துள்ளது.

130 கோடி இந்தியர்களும் உங்களின் வெற்றிக்காக வேண்டிக்கொண்டனர். நீண்டநாள்களுக்கு பிறகு ஒலிம்பிக் பதக்க மேடையில் இந்திய தேசிய கொடி ஏற்றப்பட்டு, தேசிய கீதம் ஒலித்தது. அந்தத் தருணத்தில் இந்திய மக்கள் அனைவரும் நீரஜ் சோப்ராவை தோள்களில் சுமந்தனர் என்றே கூறவேண்டும்.

பயிற்சியாளர்கள், குடும்பத்தார்கள், அணி நிர்வாகிகள், வீரர்களுக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் எனது பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார்.

இந்நிகழ்ச்சியில் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு, ஒன்றிய அமைச்சர்கள் கிரண் ரிஜிஜூ, அனுராக் தாக்கூர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: 103 டிகிரி காய்ச்சலில் நீரஜ் சோப்ரா; கரோனா பாதிப்பா?

Last Updated :Aug 15, 2021, 8:03 AM IST

ABOUT THE AUTHOR

...view details