தமிழ்நாடு

tamil nadu

நம்பர் 1 வீரர் ஜோகோவிக்குக்கு கரோனா!

By

Published : Jun 23, 2020, 10:35 PM IST

உலகின் முதல்நிலை டென்னிஸ் வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிக்குக்கு கரோனா வைரஸ் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

World Number 1 Novak Djokovic becomes latest tennis player to test positive for COVID-19
World Number 1 Novak Djokovic becomes latest tennis player to test positive for COVID-19

ஐரோப்பிய கண்டங்களில் கரோனா வைரசின் தாக்கம் குறைந்துள்ளதால், பல்வேறு நாடுகளில் கால்பந்து போட்டிகள் சில கட்டுப்பாடுகளுடன் நடைபெற்றுவருகின்றன. இந்தச் சூழலில், உலகின் முதல்நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிக் அட்ரியா டூர் என்கிற டென்னிஸ் தொடரை செர்பியாவிலும் குரோஷியாவிலும் நடத்தினார். இதில் பல்வேறு நாட்டைச் சேர்ந்த பல வீரர்களும் பங்கேற்றனர்.

இப்போட்டியினைக் கண்டுகளிக்க ஏராளமான ரசிகர்களும் மைதானத்தில் குவிந்தனர். தகுந்த இடைவெளி கடைப்பிடிக்காமல் இந்தத் தொடரை நடத்தியதால் ஜோகோவிக் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து, இந்தத் தொடரில் பங்கேற்ற மூன்று வீரர்களான டிமிட்ரோவ், போர்னா கோரிக், விக்டோர் ட்ராய்க்கி ஆகியோருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டதால் இத்தொடர் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், குரோஷியாவிலிருந்து செர்பியாவின் பெல்கிரேட் வந்தடைந்தபோது ஜோகோவிக்குக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது.

இதுகுறித்து அவர் கூறுகையில், "பெல்கிரேடு வந்தவுடன் நாங்கள் பரிசோதனை மேற்கொண்டோம். அதில் எனக்கும் எனது மனைவி ஜெலினாவிற்கும் கரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும், எனது குழந்தைகளுக்குக் கரோனா இல்லை என்பது உறுதியாகியுள்ளது.

இப்பெருந்தொற்று கட்டுக்குள் வந்ததால் இந்தத் தொடரை நடத்துவது சரியாக இருக்கும் என நாங்கள் நினைத்தோம். ஆனால், எதிர்பாராவிதமாக இந்த வைரஸ் இன்னும் இங்கு உள்ளது. இந்தப் புதிய எதார்த்தத்தைச் சமாளிக்கவும் வாழவும் நாம் இன்னும் கற்றுக்கொண்டிருக்கிறோம்.

எனக்குக் கரோனா வைரசுக்கான அறிகுறிகள் எதுவும் தென்படாததால் பதினான்கு நாள்கள் என்னைத் தனிமைப்படுத்திக் கொள்ளவுள்ளேன். இந்தத் தொடரால் மற்றவர்களுக்கு கரோனா வைரஸ் ஏற்பட்டிருந்தால் அவர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details