தமிழ்நாடு

tamil nadu

‘இது நான் விரும்பிய போட்டி அல்ல’ - டேனில் மெத்வதேவ்

By

Published : Feb 21, 2021, 8:48 PM IST

இது நான் விரும்பிய போட்டி அல்ல என்றும், அனைத்து பெருமையும் ஜோகோவிச்சையே சாரும் என்றும் ரஷ்ய டென்னிஸ் வீரர் டேனில் மெத்வதேவ் தெரிவித்துள்ளார்.

Watch | Not the match I wanted, all respect to Djokovic: Medvedev
Watch | Not the match I wanted, all respect to Djokovic: Medvedev

மெல்போர்னில் நடைபெற்ற ஆஸ்திரேலியன் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் இன்றுடன் நிறைவு பெற்றது. இன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி போட்டியில் செர்பியாவின் நோவாக் ஜோகோவிச், ரஷ்யாவின் டேனில் மெத்வதேவ்வை எதிர்கொண்டார்.

இப்போட்டியின் முடிவில் ஜோகோவிச் 7-5, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் டேனில் மெத்வதேவ்வை வீழ்த்தி ஒன்பதாவது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி அசத்தினார்.

‘இது நான் விரும்பிய போட்டி அல்ல’

போட்டி முடிவுக்கு பின் பேசிய டேனில் மெத்வதேவ், “இன்றைய போட்டி நான் எதிர்பார்த்தது அல்ல. இன்றைய போட்டிக்கான அனைத்து பெருமையும் ஜோகோவிச்சையே சாரும். இத்தொடரில் நான் இறுதி போட்டி வரை முன்னேறியதையே பெருமையாக நினைக்கிறேன். மேலும் அடுத்த ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடருக்காக காத்திருக்கிறேன்” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஆஸ்திரேலியன் ஓபன்: 9ஆவது முறையாக சாம்பியனான ஜோகோவிச்

ABOUT THE AUTHOR

...view details