தமிழ்நாடு

tamil nadu

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: ஒசாகாவுக்கு அதிர்ச்சியளித்த சினியகோவா!

By

Published : Jun 2, 2019, 2:32 PM IST

பாரீஸ்: பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவின் மூன்றாவது சுற்றுப் போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான நவோமி ஒசாகாவை வீழ்த்தி சினியகோவா வெற்றிபெற்றார்.

சினியகோவா

கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் தொடர் முக்கியக் கட்டத்தை எட்டியுள்ளது. பிரெஞ்சு ஓபன் தொடர்கள் களிமண் மைதானங்களில் நடைபெறுவதால் நட்சத்திர வீரர்களும் சில நேரங்களில் திணறுவர். அதுபோல் தான் தற்போது உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான ஜப்பானின் நவோமி ஒசாகாவை செக் குடியரசின் சினியகோவா வீழ்த்தி சாதித்துள்ளார்.

இந்தப்போட்டியின் தொடக்கத்திலிருந்தே அபாரமாக ஆடிய சினியகோவா, முதல் செட்டை 6-4 எனக் கைப்பற்றினார். இதனையடுத்து நடைபெற்ற இரண்டாவது செட்டில் சினியகோவாவின் அதிரடியான ஆட்டத்துக்கு ஈடுகொடுக்க முடியாத நவோமி ஒசாகா 6-2 என்ற செட் கணக்கில் தொடரை இழந்து தோல்வியடைந்தார்.

நவோமி ஒசாகா

நான்காவது சுற்றில் சினியகோவா மேடிசன் கீஸை எதிர்த்து ஆடவுள்ளார்.

இதனையடுத்து நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் ஆஸ்திரேலிய நட்சத்திர வீராங்கனை ஆஷ்லி பார்ட்டியை எதிர்த்து ஆண்ட்ரியா பெட்கோவிக் ஆடினார். இதில் தொடக்கத்திலிருந்தே சிறப்பாக ஆடிய ஆஷ்லி 6-3, 6-1 என்ற செட் கணக்கில் வென்று நான்காவது சுற்றுக்கு தகுதிபெற்றார்.

ஆஷ்லி பார்டி

ABOUT THE AUTHOR

...view details