கோவிட்-19 பெருந்தொற்றால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இப்பெருந்தொற்றின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, உலக நாடுகள் பலவற்றில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், உலக வில்வித்தை கூட்டமைப்பு சார்பில் ஆன் லைன் வில்வித்தை தொடரை நடத்தியது. இத்தொடரில் நேற்று (மே 16) நடைபெற்ற மகளிர் அரையிறுதிப் போட்டியில் கொலம்பியாவின் நட்சத்திர வீராங்கனை சாரா லோபஸ், அமெரிக்க வில்வித்தை வீராங்கனை பைஜ் பியர்ஸை எதிர்கொண்டார்.
இருவருக்கும் இடையிலான இப்போட்டியில் சிறப்பாக செயல்பட்ட சாரா லோபஸ் 600 - 587 என்ற புள்ளிக்கணக்கில் பைஜ் பியர்ஸை வீழ்த்தி அசத்தல் வெற்றி பெற்று, லாக்டவுன் நாக்அவுட் வில்வித்தை தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
இதனிடையே, இன்று நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் சாரா லோபஸ், நார்வேயின் ஆண்டர்ஸ் ஹாக்ஸ்டாட்டை(Anders haugstad) எதிர்கொள்ள இருக்கிறார். இப்போட்டியில் வெற்றி பெறுவோருக்கு 1000 சுவிஸ் ஃபிராங்க்(CHF) பரிசுத் தொகையாக வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:'பார்வையாளர்களின்றி கிரிக்கெட் விளையாடுவது கவுண்டி கிரிக்கெட்டைப் போன்று இருக்கும்' - ஜேம்ஸ் ஆண்டர்சன்