தமிழ்நாடு

tamil nadu

சிறந்த கால்பந்து வீரருக்கான Ballon d’Or விருது.. 8வது முறையாக வென்ற மெஸ்ஸி!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 31, 2023, 10:16 AM IST

2023 Ballon d'Or Award: 2023ஆம் ஆண்டிற்கான பலோன் டி 'ஓர் விருதை அர்ஜென்டினா கால்பந்து வீரர் மெஸ்ஸி வென்றார். 8வது முறையாக இந்த விருதை வென்று மெஸ்ஸி சாதனை படைத்துள்ளார்.

lionel-messi-pips-erling-haaland-and-kylian-mbappe-to-win-ballon-dor-2023
Ballon d’Or விருதை 8 வது முறையாக வென்றார் மெஸ்ஸி!

பிரன்ஸ் :கால்பந்து உலகின் மிக உயரிய விருதான பலோன் டி 'ஓர் விருதை சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைக்கு வருடந்தோறும் பிபா வழங்கி வருகிறது. 1956ஆம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. பாரீஸ் நகரில் நடைபெற்ற விழாவில், நடப்பாண்டுக்கான பலோன் டி 'ஓர் விருது லியோனல் மெஸ்ஸிக்கு வழங்கப்பட்டது. தனது வாழ்க்கையில் எட்டாவது முறையாக பலோன் டி'ஓர் விருதை மெஸ்ஸி வென்றுள்ளார்.

பலோன் டி ஓர் விருது:கால்பந்து உலகின் மிக உயரிய பலோன் டி 'ஓர் விருது ஆண்டுக்கு ஒரு முறை சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து பிபா வழங்கி வருகிறது. 1956 ஆம் ஆண்டு முதல் 60ஆண்டுகளுக்கு மேலாக இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. கரோனா காலத்தில் மட்டும் இந்த விருதானது அறிவிக்கப்படவில்லை.

பரிந்துரைக்கப்படும் வீரர்களில் இருந்து சிறந்த வீரர் வாக்கெடுப்பு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இந்நிலையில் இந்த ஆண்டுக்கான பரிந்துரைக்கப்பட்ட வீரர்கள் பட்டியலில் 30 ஆண்கள் மற்றும் 30 பெண்கள் இடம் பெற்றனர்.

மும்முனை போட்டி:இதனையடுத்து நடப்பு ஆண்டில் இந்த விருதை வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்து வந்தது. இந்நிலையில் ஆண்களுக்கான பிரிவில் கெவின் டி ப்ரூய்ன், ஹாலண்ட், மெஸ்ஸி, எம்பாப்பே, ரோட்ரி ஆகியோர் முதல் ஐந்து இடங்களை பிடித்தனர்.

இருப்பினும் ஹாலண்ட், மெஸ்ஸி, எம்பாப்பே ஆகியோரிடையே மும்முனை போட்டி நிலவியது. இறுதி வாக்கெடுப்பின் போது ஹாலண்ட் இரண்டாவது இடத்தையும், எம்பாப்பே மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.

லியோனல் மெஸ்ஸி சாதனை:இந்நிலையில் 8வது முறையாக லியோனல் மெஸ்ஸி பலோன் டி 'ஓர் விருதை வென்று சாதனை படைத்துள்ளார். மேலும் இந்த விருதுக்கு அதிக முறை (மொத்தம் 16 முறை) பரிந்துரைக்கப்பட்ட வீரர் என்ற பெருமையையும் மெஸ்ஸி தட்டிச் சென்றார். 2009 ஆம் ஆண்டு முதல் முறையாக பாலன் டி 'ஓர் விருதை வென்ற மெஸ்ஸி, அதன் பின் 2010, 2011, 2012, 2015, 2019 மற்றும் 2021 என அடுத்தடுத்த ஆண்டுகளில் வென்று சாதனை படைத்தார்.

இதன் மூலம் அதிக முறை இந்த விருதை வென்ற கால்பந்து வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளார் மெஸ்ஸி. கடந்த ஆண்டு நடைபெற்ற கால்பந்து உலகக் கோப்பையில் அர்ஜெண்டினா அணி வெல்வதில் முக்கிய பங்கு வகித்த மெஸ்ஸி, 7 கோல்கள் அடித்ததுடன் 4 முறை ஆட்டநாயகன் விருதை தட்டி சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. பெண்களுக்கான பிரிவில் உலகக் கோப்பை வென்ற நட்சத்திர வீராங்கனையான அடானா பொன்மதி பலோன் டி 'ஓர் விருதை வென்றார்.

இதையும் படிங்க:37வது தேசிய விளையாட்டு போட்டி : தடகளத்தில் தமிழக வீரர் தங்கம் வென்று சாதனை! வாள்வீச்சில் பவானி தேவி தங்கம்!

ABOUT THE AUTHOR

...view details