தமிழ்நாடு

tamil nadu

முதல் சாம்பியன் பட்டத்தை வென்றார் நரேன் கார்த்திகேயன்!

By

Published : Nov 25, 2019, 11:39 AM IST

இந்தியாவின் முதல் பந்தய கார் வீரரான தமிழ்நாட்டைச் சேர்ந்த நரேன் கார்த்திகேயன் ஃபார்முலா 1 கார் பந்தயத்தில் தனது முதல் பட்டத்தை வென்றார்.

இந்தியாவின் நட்சத்திர கார் பந்தயகாரரும், முதல் பந்தய கார் ஓட்டுநருமான தமிழ்நாட்டைச் சேர்ந்த நரேன் கார்த்திகேயன், நேற்று ஜப்பானில் நடைபெற்ற சூப்பர் ஜீடி எக்ஸ் டிடீஎம் பந்தயத்தில் பங்கேற்றிருந்தார்.

இந்த பந்தயத்தில் உலகம் முழுவதும் இருந்து 21 பந்தய வீரர்கள் கலந்து கொண்டனர். இந்தப் பந்தயத்தில் பந்தயத்திற்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட நகஜிமா ஹோண்டா என்எஸ்எக்ஸ் ஜிடியை ஓட்டிய கார்த்திகேயன் வறண்ட மற்றும் ஈரமான சூழ்நிலைகளில் சிறப்பாக செயல்பட்டார்.

பந்தய இலக்கான 4.563 கி.மீ., தூரத்தை ஒரு நிமிடம் 47 விநாடிகளில் கடந்து, முதலிடத்தைப் பிடித்து சாதனைப் படைத்தார். இதன் மூலம் சர்வதேச ஃபார்முலா 1 கார் பந்தயத்தில் கோப்பையை வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையைப் படைத்து, நரேன் கார்த்திகேயன் அசத்தியுள்ளார்.

இதையும் படிங்க: இங்கிலாந்தை இன்னிங்ஸ் தோல்வியடையச் செய்த நியூசிலாந்து!

Intro:Body:

India's first Formula 1 driver Narain Karthikeyan claimed an emphatic victory in the SUPER GT x DTM Dream Race


Conclusion:

ABOUT THE AUTHOR

...view details