தமிழ்நாடு

tamil nadu

செஸ் ஒலிம்பியாட்டில் இன்று: பிரதமர் மோடி தேர்ந்தெடுத்த கருப்பு காய்களுடன் களமிறங்கும் இந்தியா!

By

Published : Jul 29, 2022, 2:24 PM IST

செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்திய அணிகள் இன்று (ஜூலை 29) போட்டியிடும் ஆட்டங்களின் விவரம் குறித்து காணலாம்.

செஸ் ஒலிம்பியாட்டில் இன்று
செஸ் ஒலிம்பியாட்டில் இன்று

சென்னை:செஸ் ஒலிம்பியாட் தொடர் சென்னை மாமல்லபுரத்தில் இன்று (ஜூலை 29) மதியம் 3 மணியளவில் தொடங்க உள்ளது. 187 நாடுகளைச் சேர்ந்த சுமார் 2000 வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இத்தொடரில், இந்தியா சார்பாக ஆடவர், மகளிர் பிரிவில் ஏ, பி, சி என மொத்தம் 6 அணிகளில் 30 வீரர்கள் பங்கேற்கின்றனர். ஒவ்வொரு அணிகளுக்கும் தனித்தனி அடையாள எண்கள் ஒதுக்கப்பட்டுள்ளன(Lot Number).

இந்நிலையில், தொடரின் முதல் சுற்று ஆட்டம் இன்று நடைபெறுகிறது. இதில், இந்திய ஆடவர் 'ஏ' அணி (2696) ஜிம்பாப்வே அணியுடனும் (2208), ஆடவர் 'பி' அணி (2649) ஐக்கிய அரபு அமீரகத்துடனும் (2146), ஆடவர் 'சி' அணி (2619) தெற்கு சூடான் அணியுடனும் (2101) மோத உள்ளன.

மற்றொரு புறம் மகளிர் அணி பிரிவில் இந்திய 'ஏ' அணி (2486) தஜிகிஸ்தான் அணியுடனும் (1775), மகளிர் 'பி' அணி (2351) வேல்ஸ் அணியுடனும் (1673), மகளிர் 'சி' அணி (2318), ஹாங்காங் அணியுடனும் (1623) மோதுகின்றன.

மேலும், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நேற்று (ஜூலை 28) மாலை நடைபெற்ற தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது தரவரிசையில் முன்னணியில் உள்ள நாடுகளுக்கு காய்களை ஒதுக்கும் நிகழ்வு நடைபெற்றது.

அதில், கொண்டுவரப்பட்ட கருப்பு மற்றும் வெள்ளை நிறக்காய்களில் பிரதமர் மோடி கருப்பு நிறத்தை தேர்வுசெய்தார். இதன்மூலம், இந்திய மகளிர் 'ஏ' அணிக்கும், அமெரிக்காவின் ஆடவர் அணிக்கும் கருப்பு நிறக்காய் ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:செஸ் ஒலிம்பியாட்: செஸ் போர்டு முதல் போட்டி முடிவுகள் வரை... எல்லாமும் இதோ...!

ABOUT THE AUTHOR

...view details