தமிழ்நாடு

tamil nadu

சென்னை ஓபன் ஏடிபி சேலஞ்சர்ஸ் டென்னிஸ் தொடர் : இந்தியா - இங்கிலாந்து இணை சாம்பியன்!

By

Published : Feb 19, 2023, 9:51 AM IST

சென்னை ஓபன் ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் தொடரில் இரட்டையர் பிரிவில் இந்திய வீரர் அர்ஜுன் காதே, இங்கிலாந்து வீரர் ஜெய் க்ளார்க் இணை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

சென்னை ஓபன்ச் டென்னிஸ்
சென்னை ஓபன்ச் டென்னிஸ்

சென்னை:தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் சார்பில் சென்னை ஓபன் ஏடிபி சேலஞ்சர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டென்னிஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஒற்றையர், இரட்டையர் பிரிவுகளில் 14 நாடுகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

மேலும், இந்த தொடரில் இரட்டையர் பிரிவுவில் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் இந்தியாவின் அர்ஜுன் காதே, இங்கிலாந்து ஜெய் க்ளார்க் இணை, ஆஸ்திரியாவின் செபாஸ்டியன், க்ரோசியாவின் நினோ இணையை எதிர்கொண்டது. தொடக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய இந்தியா, இங்கிலாந்து இணை 6-0 ,6-4 என்ற செட் கணக்கில் எதிர் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.

சென்னை ஓபன்ச் டென்னிஸ்: இந்தியா - இங்கிலாந்து இணை சாம்பியன்!

சாம்பியன் பட்டத்தை வென்ற ஜோடிக்கு 7590 US டாலர் மற்றும் கோப்பையை தமிழ்நாடு விளையாட்டுத் துறை கூடுதல் செயலாளர் அதுல்ய மிஸ்ரா மற்றும் தமிழ்நாடு டென்னிஸ் சங்கத்தின் தலைவர் விஜய் அமிர்தராஜ் ஆகியோர் இணைந்து வழங்கினர். இரண்டாம் இடத்தை பிடித்த ஆஸ்திரியாவின் செபாஸ்டியன், க்ரோசியாவின் நினோ ஜோடிக்கு 4400 US டாலர் மற்றும் கோப்பை வழங்கப்பட்டது.

இதையும் படிங்க: ஹன்சிகாவின் "லவ் ஷாதி ட்ராமா" - மக்களிடையே பெரும் வரவேற்பு!

ABOUT THE AUTHOR

...view details