தமிழ்நாடு

tamil nadu

சீன மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: சாத்விக் - சிராக் ஜோடி அதிர்ச்சி தோல்வி.. நடப்பு சீசனில் முதல் தோல்வி!

By PTI

Published : Nov 26, 2023, 8:21 PM IST

சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரின் இறுதி போட்டியில் சீனாவின் லியாங் வெய் கெங் - வாங் சாங் ஜோடியிடம் இந்திய இணை சாத்விக் - சிராக் தோல்வியைத் தழுவியது.

Badminton
Badminton

ஷென்சென்: சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் அங்குள்ள ஷென்சென் நகரில் நடைபெற்றது. இந்த தொடரின் ஆண்கள் இரட்டையர் பிரிவின் இறுதி போட்டி இன்று (நவ. 26) நடைபெற்றது. இதில் இந்தியாவை சேர்ந்த சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி - சிராக் ஷெட்டி ஜோடி நம்பர் ஒன் ஜோடியான சீனாவின் லியாங் வெய் கெங் - வாங் சாங்யை எதிர்கொண்டது.

இதில் லியாங் வெய் கெங் - வாங் சாங் ஜோடி 19-க்கு, 21, 21-க்கு 18, 19-க்கு 21 என்ற செட் கணக்கில் ஆசிய விளையாட்டு சாம்பியனான சாத்விக் - சிராக் ஜோடியை வீழ்த்தி இறுதி போட்டியில் வென்றது. இந்த போட்டியானது சுமார் 1 மணி நேரம் 11 நிமிடம் நடைபெற்றது.

இந்திய ஜோடியான சாத்விக் - சிராக் ஆகியோர் நடப்பாண்டில் மட்டும் ஆறு இறுதி போட்டிகளில் கலந்து கொண்டு அடுத்தடுத்து வெற்றி பெற்று வந்த நிலையில் அந்த வீறுநடைக்கு சீன ஜோடி முட்டுக்கட்டை போட்டது. நடப்பாண்டில் சீன மாஸ்டர்ஸ் தோல்வியே இந்திய இணைக்கு முதல் தோல்வி என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்திய ஜோடியான சாத்விக் - சிராக் ஆகியோர் இந்த ஆண்டில் மட்டும் ஆசியன் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப், இந்தோனேஷியா சூப்பர் 1000, கொரியா சூப்பர் 500, சுவிஸ் சூப்பர் 300, மற்றும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் தங்கம் ஆகியவற்றை வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:"4 ஆண்டுகளுக்கு ஒரு முறை வாய்ப்பு... 100% உழைப்பையும் போடுவேன்.. பயிற்சிக்காக வெளிநாடு செல்கிறேன்" - நீரஜ் சோப்ரா!

ABOUT THE AUTHOR

...view details