தமிழ்நாடு

tamil nadu

'இந்தியாவிற்காக பதக்கம் வெல்வதே எனது கனவு' - பாலக் கோலி

By

Published : Dec 24, 2020, 8:02 PM IST

இந்தியாவிற்காக ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வெல்வதே என்னுடைய கனவு என ஈடிவி பார்த்துடனான நேர்காணலில் பாரா ஒலிம்பிக் பேட்மிண்டன் வீராங்கனை பாலக் கோலி தெரிவித்துள்ளார்.

I am confident of bringing medal for India in singles event: Palak Kohli
I am confident of bringing medal for India in singles event: Palak Kohli

இந்திய பாரா ஒலிம்பிக் பேட்மிண்டன் வீராங்கனை பாலக் கோலி. சிறுவயதிலேயே தனது ஒரு கையை இழந்த இவர், பேட்மிண்டன் விளையாட்டில் கொண்ட ஆர்வம் காரணமாக பயிற்சிபெறத் தொடங்கியுள்ளார்.

தொடர்ந்து தனது விடா முயற்சியுடன் பயிற்சி பெற்று வந்த பாலக் கோலி, இன்று (டிச.24) சர்வதேச பாரா ஒலிம்பிக் பேட்மிண்டன் தரவரிசைப் பட்டியலில் ஐந்தாம் இடத்தைப் பிடித்து சாதித்துள்ளார். இந்நிலையில் பாலக் கோலி ஈடிவி பாரத்துடனான நேர்காணலின்போது, இந்தியாவிற்காக பதக்கங்ளை வெல்ல தான் உறுதியுடன் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

பாலக் கோலியுடனான நேர்காணல் பின்வருமாறு:

கேள்வி : ஊரடங்கின்போது உங்களுக்கு தற்காலிகமாக லக்னோவில் பயிற்சி முகாம் செயல்பட்டது. இப்போது உங்களுடைய பயிற்சி எப்படி இருக்கிறது?

பாலக் கோலி :ஆம். ஊரடங்கின்போது பயிற்சி பெறுவதற்கு மிகவும் சிரமமாக இருந்தது. ஏனெனில் என்னுடைய பயிற்சியாளர், சக வீரர்கள் என யாருடனும் தொடர்பு கொள்ளமுடியவில்லை. இருப்பினும் எனது பயிற்சியாளர் முன்கூட்டியே நிலையை அறிந்திருந்ததால், எங்களுக்குத் தேவையான அனைத்து உபகரணங்களையும், பயிற்சி பெறுவதற்கு தேவையான ஏற்பாடுகளையும் செய்திருந்தார். தற்போது, லக்னோவின் எனது பயிற்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது. 2017 முதல், நான் இங்கே பயிற்சி பெற்று வருகிறேன்.

பாரா ஒலிம்பிக் பேட்மிண்டன் வீராங்கனை பாலக் கோலி

கேள்வி: விளையாட்டு அமைச்சரிடம் கோரிக்கையை வைத்த பிறகும், உங்களை டாப்ஸில் (TOPS) சேர்ப்பதில் சிக்கல் ஏற்பட்டது. ஏன் உங்கள் மீது ஏதேனும் புகார்கள் உள்ளதா?

பாலக் கோலி : என்மீது புகார்கள் ஏதும் இல்லை. ஒலிம்பிக் ஆண்டில் நான் சர்வதேச பாரா ஒலிம்பிக் பேட்மிண்டன் தரவரிசைப் பட்டியலில் 5ஆம் இடத்தைப் பிடித்து விட்டேன். எனவே நான் டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் தகுதி பெறும் வாய்ப்பும் கிடைத்தது. ஆனால் அதற்குள்ளாகவே கரோனா காரணமாக விளையாட்டுப் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டதால், சூழ்நிலைகள் மற்றும் நிபந்தனைகள் காரணமாக டாப்ஸில் எனது பெயரை சேர்க்க சற்று தாமதமானது.

கேள்வி : நீங்கள் பயிற்சி பெறும் முறை பற்றி கூறுங்கள்?

பாலக் கோலி : 2021ஆம் ஆண்டின் பாரா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளுக்காக அரசு எங்களுக்கு பெரும் ஆதரவை வழங்கி வருகிறது. அது எங்களுக்கு பெரும் நம்பிக்கையை அளித்துள்ளது. மேலும் பயிற்சியாளர் கவுரவ் கண்ணா, எனது ஒட்டுமொத்த பயிற்சியிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

அதேசமயம் டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் நான் பங்கேற்பதற்கு இன்னும் ஆறு மாதங்களுக்கு மேல் உள்ளன. அதனால் என்னுடைய பயிற்சியில் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறேன்.

கேள்வி : உங்களுக்கு அங்கு ஏதேனும் சிக்கல்கள் உள்ளனவா?

பாலக் தேவி : ’சிக்கல்’ என்பதற்கு பதிலாக ’சவால்கள்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்த விரும்புகிறேன். ஏனெனில் நான் இளம்பெண் என்பதால் என்னை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. நான் பயிற்சியைத் தொடங்கியபோது நான் உடல் சார்ந்த் பிரச்னைகளை சந்திக்க நேர்ந்தது. பின்னர் இங்குள்ள சக வீரர்கள் எனக்கு ஊக்கமளித்தனர்.

'இந்தியாவிற்காக பதக்கம் வெல்வதே எனது கனவு'

மேலும் நான் பேட்மிண்டன் போட்டிகளில் விளையாடத் தொடங்கியது முதலே எனது குடும்பத்தினரும் எனக்கு பெரும் ஆதரவாக இருந்தனர். நான் தற்போது டோக்கியோ பாரா ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளுக்குத் தகுதி பெறுவேன் என எனது பயிற்சியாளர் மற்றும் என் பெற்றோரைத் தவிர வேறுயாரும் நினைத்து கூட பாத்திருக்க மாட்டார்கள்.

கேள்வி : ஒற்றையர் பிரிவுக்காக நீங்கள் எவ்வாறு பயிற்சி பெறுகிறீர்கள்?

பாலக் கோலி : தொடக்கத்தில் காயம் காரணமாக என்னால் பல போட்டிகளில் பங்கேற்க முடியவில்லை. நான் ஒற்றையர் பிரிலிருந்து விலகிவிடலாம் என்று கூட நினைத்திருந்தேன். ஆனால் நான் காயமடைந்திருந்த தருணத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது என்னுடைய அதிர்ஷ்டம் என்று தான் சொல்ல வேண்டும். தற்போது நான் முழுமையாக காயத்திலிருந்து மீண்டுள்ளேன். அதனால் தற்போது மீண்டுக் ஒற்றையர் பிரிவு போட்டிகளுக்கான பயிற்சியை மேற்கொண்டு வருகிறேன்.

கேள்வி: உங்களது இலக்கு என்ன?

பாலக் கோலி : பாரா ஒலிம்பிக் தொடரில் பதக்கம் வெல்வது மட்டுமே என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ஊக்கமருந்து சர்ச்சை: சத்னம் சிங்கிற்கு 2 ஆண்டுகள் தடை!

ABOUT THE AUTHOR

...view details