தமிழ்நாடு

tamil nadu

FIFA World Cup: தொடரில் இருந்து வெளியேறினாலும் கேமரூன் படைத்த சாதனை!

By

Published : Dec 3, 2022, 9:43 AM IST

பிபா உலகக்கோப்பையின் நேற்றைய ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து செர்பியாவை வீழ்த்தி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது. மேலும் பிரேசிலை கேமரூன் வென்றபோதும், சுற்றில் இருந்து வெளியேறியது.

FIFA World Cup: தொடரில் இருந்து வெளியேறினாலும் கேமரூன் படைத்த சாதனை!
FIFA World Cup: தொடரில் இருந்து வெளியேறினாலும் கேமரூன் படைத்த சாதனை!

கத்தார்:22வது பிபா உலகக்கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இதன் நேற்றைய ஆட்டத்தில் ஜி பிரிவில் செர்பியாவும் சுவிட்சர்லாந்தும் மோதின. ஆட்டத்தின் தொடக்கத்தில் 20வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்தின் செர்டான், ஒரு கோல் அடித்து முன்னிலை பெற்றுக் கொடுத்தார்.

26வது நிமிடத்தில் செர்பியாவின் அலெக்சாண்டர் மிட்ரோவிக், ஒரு கோல் அடித்து பதிலடி கொடுத்தார். தொடர்ந்து 35வது நிமிடத்தில் செர்பியாவின் டுசான் ஒரு கோல் அடித்து முன்னிலைக்கு கொண்டு வந்தார். முதல் பாதியின் விறுவிறுப்பான கடைசி கட்டத்தில் 44வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்தின் பிரில் எம்போலோ ஒரு கோல் அடித்தார்.

இதன் மூலம் 2-2 என்ற கோல் கணக்கில் அணிகள் சமநிலை வகித்தன. பின்னர் இரண்டாவது பாதியின் 48வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்தின் ரெமோ புருலெர், ஒரு கோல் அடித்து அணியை முன்னிலைக்கு கொண்டு வந்தார். இறுதியில், சுவிட்சர்லாந்து 3-2 என்ற கோல் கணக்கில் செர்பியாவை வீழ்த்த, நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

டிசம்பர் 7ஆம் தேதி நடைபெற உள்ள 16வது சுற்றில் போர்ச்சுகலை எதிர்கொள்கிறது. இதனையடுத்து கேமரூன் பிரேசில் அணிகள் மோதின. இதில் 1-0 என்ற கோல் கணக்கில் கேமரூன் அணி, பிரேசிலை வீழ்த்தியது. இருப்பினும், 16வது சுற்றில் இருந்து கேமரூன் அணி வெளியேறியுள்ளது. உலகக்கோப்பையில் பிரேசிலை தோற்கடித்த முதல் ஆப்பிரிக்க அணி கேமரூன் ஆகும்.

இதையும் படிங்க:ஸ்பெயினை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறிய ஜப்பான்

ABOUT THE AUTHOR

...view details