தமிழ்நாடு

tamil nadu

2022 ஃபிபா கால்பந்து தொடர் - கோலாகல கலை நிகழ்ச்சிகளுடன் இன்று தொடக்கம்!

By

Published : Nov 20, 2022, 3:21 PM IST

பி.பா. உலக கோப்பை கால்பந்து

2022 ஃபிபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் கோலாகல கலை நிகழ்வுகளுடன் கத்தாரில் இன்று தொடங்குகிறது. தொடக்க விழாவில் துணை குடியரசுத்தலைவர் ஜெகதீப் தன்கர் கலந்துகொள்கிறார்.

கத்தார்: சர்வதேச கால்பந்து அமைப்பான ஃபிபா நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்தி வருகிறது. 2022ஆம் ஆண்டுக்கான கால்பந்து தொடர் கத்தாரில் நடைபெறுகிறது. இதுவரை மத்திய கிழக்கு நாடுகளில் கால்பந்து தொடர் நடைபெறாத நிலையில், முதல்முறையாக சர்வதேச கால்பந்து தொடரை நடத்தும் பெருமையை கத்தார் பெற்றுள்ளது.

நடப்பு சாம்பியன் பிரான்ஸ், முன்னாள் சாம்பியன்கள் ஜெர்மனி, ஸ்பெயின், உருகுவே, இங்கிலாந்து, நெதர்லாந்து, பெல்ஜியம், போர்ச்சுகல், குரோஷியா, பிரேசில், அர்ஜென்டினா உள்ளிட்ட 32 அணிகள் களமிறங்க உள்ளன. முதல் ஆட்டத்தில் போட்டியை நடத்தும் கத்தாரும், ஈகுவடார் அணிகளும் மோத உள்ளன.

முன்னதாக இந்திய நேரப்படி, இன்று இரவு 7:30 மணிக்குத் தொடக்க விழா கோலாகலமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பல்வேறு கலை நிகழ்வுகளுடன் விழா நடைபெற உள்ளது.

கத்தார் தலைநகர் தோஹாவில் பகுதியில் ஏறத்தாழ 60 ஆயிரம் ரசிகர்கள் அமரும் வகையில் அல் பையத் மைதானம் கட்டமைக்கப்பட்டுள்ளது. பிரபலமான தென்கொரிய இசைக்குழு பி.டி.எஸ். (BTS) உள்பட பல்வேறு நாடுகளைச்சேர்ந்த இசை மற்றும் நடனக்கலைஞர்கள் தொடக்க விழாவில் கண்கவர் விருந்து அளிக்க உள்ளனர்.

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் தொடக்க விழாவில், இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் துணை குடியரசுத்தலைவர் ஜெகதீப் தன்கர், தன் மனைவியுடன் கலந்துகொள்கிறார்.

ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து

பல்வேறு நாடுகளில் இருந்து ஃபிபா உலகக்கோப்பை கால்பந்து தொடரைக் காணப் பல்வேறு நாடுகளில் இருந்து 10 லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் கத்தார் வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அர்ஜென்டினா அணியின் மெஸ்ஸி, போர்ச்சுகல் அணியின் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோர் தங்களது கடைசி உலகக் கோப்பையில் விளையாடுகின்றனர்.

அர்ஜென்டினா, பிரேசில், போர்ச்சுகல் உள்ளிட்ட அணிகள் அதிக பலத்துடன் காணப்படுவதால் கோப்பையை எந்த அணி வெல்லும் என்ற சுவராஸ்யம் ரசிகர்களிடையே தொற்றிக்கொண்டது.

இதையும் படிங்க:சென்னையில் இருந்து சேலம், கோவை வழியாக சபரிமலை சிறப்பு ரயில் - தெற்கு ரயில்வே அறிவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details