தமிழ்நாடு

tamil nadu

ஐஎஸ்எல் 7: ஒடிசா எஃப்சியை வீழ்த்தியது ஹைதராபாத் எஃப்சி!

By

Published : Nov 23, 2020, 10:43 PM IST

ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஹைதராபாத் எஃப்சி அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஒடிசா எஃப்சி அணியை வீழ்த்தியது.

ISL 7: Odisha pay the penalty as Hyderabad keep first-ever clean sheet
ISL 7: Odisha pay the penalty as Hyderabad keep first-ever clean sheet

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று (நவ.23) நடைபெற்ற நான்காவது லீக் ஆட்டத்தில் ஹைதராபாத் எஃப்சி அணி - ஒடிசா எஃப்சி அணியை எதிர்கொண்டது.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தில் நடைபெற்ற இப்போட்டியின் தொடக்கம் முதலே இரு அணிகளும் கோலடிக்க முயற்சித்தனர். இப்போட்டியின் 34ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை சரியாக பான்படுத்திய ஹைதராபாத் அணியின் சந்தானா கோலடித்து அசத்தினார்.

இதன் மூலம் முதல் பாதி ஆட்டநேர முடிவில் ஹைதராபாத் எஃப்சி அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் வலிமையான டிஃபென்ஸை வெளிப்படுத்தியதால், இரு தரப்பும் கோலடிக்க இயலவில்லை.

இதன் மூலம் ஆட்டநேர முடிவில் ஹைதராபாத் எஃப்சி அணி 1-0 என்ற கோல்கணக்கில் ஒடிசா எஃப்சி அணியை வீழ்த்தி, நடப்பு சீசனை வெற்றியுடன் தொடங்கியுள்ளது.

இதையும் படிங்க:‘ஸ்டோய்னிஸ் 5 மடங்கு சிறப்பாக விளையாடுகிறார்’ - ரிக்கி பாண்டிங்

ABOUT THE AUTHOR

...view details