தமிழ்நாடு

tamil nadu

சென்னை சிட்டி எஃப்சி அணியின் புதிய பயிற்யாளராக சத்தியசாகரா நியமனம்!

By

Published : Dec 10, 2020, 8:34 PM IST

ஐ - லீக் கால்பந்து தொடரின் முன்னாள் சாம்பியனான சென்னை சிட்டி எஃப்சி அணியின் புதிய பயிற்சியாளராக சத்தியசாகரா நியமிக்கப்பட்டுள்ளார்.

Chennai City FC name Satyasagara as new head coach
Chennai City FC name Satyasagara as new head coach

இந்தியன் சூப்பர் லீக் போட்டிகளைத் தொடர்ந்து ஐ-லீக் கால்பந்து தொடர் வருகிற அடுத்தாண்டு ஜனவரி மாதத்தில் நடத்த அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு திட்டமிட்டுள்ளது. இதற்கென தொடரில் பங்கேற்கும் அணிகள் தற்போது அணி தேர்வு மற்றும் பயிற்சியாளர்களை நியமித்து வருகின்றன.

அதன்படி ஜனவரி மாதம் நடைபெறவுள்ள ஐ - லீக் கால்பந்து தொடரில் பங்கேற்கும் சென்னை சிட்டி எஃப்சி அணியின் தலைமைப் பயிற்சியாளராக சத்தியசாகரா நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக சத்தியசாகரா, கொல்கத்தா கிரிக்கெட் & கால்பந்து கிளப் (CCFC) அணியின் துணைப் பயிற்சியாளராக பணியாற்றி வந்தார். இவர் கிட்டத்தட்ட 26 வருடங்கள் வெவ்வேறு அணிகளில் பயிற்சியாளராக பணியாற்றியுள்ளார்.

இதுகுறித்து பேசிய சத்தியசாகரா, “சென்னை சிட்டி எஃப்சி அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. இதற்கு முன்னதாக நான் சி.சி.எஃப்.சி அணியில் அக்பர் நவாஸுடன் பணியாற்றியுள்ளேன். அதனால் இந்த பொறுப்பை எவ்வாறு கையாள்வது என்பதை நான் நன்கறிவேன்.

உள்ளூர் வீரகளுடன் பணியாற்றுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். ஏனெனில் தமிழ்நாட்டின் உள்ளூர் வீரர்களின் திறன்கள் எப்போதும் எனக்கு மகிழ்ச்சியளித்துள்ளது. அதனால் இந்தாண்டு அவர்களின் செயல்திறன் எப்படி உள்ளது என்பதைக் காண ஆவலுடன் இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:இத்தாலி கால்பந்து ஜாம்பவான் பவுலோ ரோஸி காலமானார்!

ABOUT THE AUTHOR

...view details