தமிழ்நாடு

tamil nadu

IND vs NZ: 2ஆவது ஒருநாள் போட்டி மழைக்காரணமாக ரத்து

By

Published : Nov 27, 2022, 3:39 PM IST

இந்தியா-நியூசிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான 2ஆவது ஒருநாள் போட்டி தொடர் மழைக்காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

Hamilton ODI abandoned
Hamilton ODI abandoned

ஹாமில்டன்: இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. மூன்று போட்டிகளில் கொண்ட டி20 தொடரை கைப்பற்றியது. அதைத்தொடர்ந்து ஒருநாள் தொடரில் விளையாடிவருகிறது. முதலாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

அதன்பின் இன்று (நவம்பர் 27) ஹாமில்டனில் 2ஆவது ஒருநாள் போட்டி தொடங்கியது. முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணியின் கேப்டன் ஷிகர்தவான், சுப்மன் கில் இருவரும் முதலாவதாக களமிறங்கினர். 4.5 ஓவர்களில் 22 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டது.

இதனால் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. சில மணி நேரங்களுக்கு பின் மழை குறைந்ததது. இருப்பினும் ஆட்டம் 29 ஓவர்களாக குறைக்கப்பட்டது. மீண்டும் ஷிகர்தவான், சுப்மன் கில் ஆட்டத்தை தொடர்ந்தனர். 5ஆவது ஓவரில் ஷிகர்தவான் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து சூரிய குமார் யாதவ் களமிறங்கினார். 12.5 ஓவர்கள் முடிவில் 89 ரன்கள் எடுத்திருந்த போது மீண்டும் மழை குறுக்கிட்டது. இந்த முறை 2 மணி நேரத்திற்கும் மேலாக மழை தொடர்ந்தால் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. இந்த ரத்து காரணமாக நியூசிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இதையும் படிங்க:பிபா உலககோப்பை: "ரவுண்ட் 16" சுற்றுக்கு முதல் அணியாக பிரான்ஸ் தகுதி

ABOUT THE AUTHOR

...view details