தமிழ்நாடு

tamil nadu

IPL Auction 2024: ஐபிஎல் வரலாற்றில் சாதனை படைத்த பேட் கம்மின்ஸ்! இவர் தான் பர்ஸ்ட்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 19, 2023, 3:13 PM IST

Updated : Dec 19, 2023, 3:28 PM IST

ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்சை 20 கோடியே 50 லட்ச ரூபாய்க்கு ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணி விலைக்கு வாங்கியது. இதன் மூலம் ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போன வீரரானார் பேட் கம்மின்ஸ்.

பேட் கம்மின்ஸ்
Pat Cummins

துபாய் : 17வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் 2024ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கி மே மாதம் வரை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இதையொட்டி வீரர்களின் மினி ஏலம் இன்று (டிச. 19) துபாயில் நடைபெற்று வருகிறது. ஐபிஎல் ஏலம் இந்தியாவில் இல்லாமல் வெளிநாட்டில் நடப்பது இதுவே முதல்முறையாகும்.

இந்திய நேரப்படி மதியம் 1 மணிக்கு வீரர்களுக்கான மினி ஏலம் தொடங்கிய நிலையில், வீரர்களை ஏலம் எடுக்க ஐபிஎல் அணிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில் உலக கோப்பை கிரிக்கெட் தொடரை வென்று தந்தை ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ்க்கு தொடக்கம் முதலே கடும் கிராக்கி நிலவியது.

அவரை விலைக்கு வாங்குவதில் ஐபிஎல் அணிகளிடையே கடும் போட்டி நிலவியது. ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்சை 20 கோடியே 50 லட்ச ரூபாய்க்கு ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணி விலைக்கு வாங்கியது. வலக்கை வேகப்பந்து வீச்சாளரான் பேட் கம்மின்ஸ் பேட்டிங்கில் பெரிய அளவில் ஜொலிக்க கூடிய வீரராக தெரியவில்ல.

அடிப்படை தொகையான 2 கோடி ரூபாயில் பேட் கம்மின்ஸ் ஏலத்தில் கலந்து கொண்ட நிலையில், அவரை வாங்க ஐதராபாத் சன் ரைசர்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளிடையே கடும் போட்டி நிலவியது. இரு அணிகளும் மாறி மாறி அவரது விலையை ஏற்றிய நிலையில் இறுதியில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது.

ஏறத்தாழ 20 கோடியே 50 லட்ச ரூபாய்க்கு பேட் கம்மின்சை ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணி விலைக்கு வாங்கியது. இதன் மூலம் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அதிகபட்ச தொகைக்கு ஏலம் போன வெளிநாட்டு வீரர் என்ற சாதனையை பேட் கம்மின்ஸ் படைத்து உள்ளார். இதற்கு முன் இங்கிலாந்து வீரர் சாம் கரன் கடந்த 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியால் 18 கோடியே 50 லட்ச ரூபாய்க்கு வாங்கப்பட்டார்.

இதுவே ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றி ஒரு வெளிநாட்டு வீரர் அதிகபட்ச தொகைக்கு வாங்கப்பட்ட சாதனையாக இருந்தது. தற்போது அந்த சாதனையை பேட் கம்மின்ஸ் முறியடித்து உள்ளார். இதுவரை 50 டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி உள்ள பேட் கம்மின்ஸ் 55 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார்.

கடந்த 2023ஆம் ஆண்டு ஆஷஸ் தொடர் மற்றும் உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்காக ஐபிஎல் கிரிக்கெட் விளையாட மறுத்தார். இதற்கு முன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக பேட் கம்மின்ஸ் விளையாடி இருந்தார்.

இதையும் படிங்க :IPL Auction 2023 : துபாயில் ஐபிஎல் மினி ஏலம்! வரலாறு படைக்கப் போகும் வீரர்கள் யாரார்?

Last Updated : Dec 19, 2023, 3:28 PM IST

ABOUT THE AUTHOR

...view details