ETV Bharat / sports

IPL Auction 2023 : துபாயில் ஐபிஎல் மினி ஏலம்! வரலாறு படைக்கப் போகும் வீரர்கள் யாரார்?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 18, 2023, 11:00 PM IST

17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான மினி ஏலம் நாளை (டிச. 19) துபாயில் நடைபெறுகிறது.

ஐபிஎல் மினி ஏலம்
IPL Auction 2023

துபாய் : 17வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி 2024ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கி மே மாதம் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இதையொட்டி வீரர்களின் மினி ஏலம் நாளை (டிச. 19) துபாயில் நடைபெற உள்ளது. முதல் முறையாக ஐபிஎல் ஏலம் இந்தியாவில் இல்லாமல் வெளிநாட்டில் நடக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஏலத்தில் வீரர்களை வாங்க அதிகபட்சமாக குஜராத் டைட்டன்ஸ் அணி 38 கோடியே 15 லட்ச ரூபாய் கையிருப்பு உள்ளது. நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 31 கோடியே 4 லட்ச ரூபாய் கையிருப்பு கொண்டு உள்ளது. அதேபோல் குறைந்தபட்சமாக லக்னோ அணியிடம் 13 கோடியே 15 லட்ச ரூபாய் கையிருப்பு உள்ளது உள்ளது.

அதுமட்டுமல்லாமல் ஐபிஎல் ஏலம் வரலாற்றில் முதல் முறையாக ஏலத்தை பெண் ஒருவர் நடத்த உள்ளார். மகளிர் பிரீமியர் லீக் தொடருக்கான ஏலத்தை நடத்திய மல்லிகா சாகர் இதனை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. நாளை (டிச. 18) இந்திய நேரப்படி மதியம் 1 மணிக்கு வீரர்களுக்கான மினி ஏலம் தொடங்க உள்ளது.

ஏலப் பட்டியலில் 214 இந்தியர்கள், 119 வெளிநாட்டு வீர்ர்கள் என்று மொத்தம் 333 வீரர்கள் இடம் பிடித்து இருப்பதாக ஐ.பி.எல். நிர்வாகம் அறிவித்து உள்ளது. இவர்களில் 116 வீரர்கள் சர்வதேச போட்டியில் விளையாடிய அனுபவம் கொண்டவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஏலத்தில் 30 வெளிநாட்டவர் உள்பட மொத்தம் 77 வீரர்கள் 10 அணிகளுக்காக எடுக்கப்பட உள்ளனர்.

இந்த ஏலத்தில் 3 இந்திய வீரர்கள் (ஹர்ஷல் பட்டேல், ஷர்துல் தாக்கூர், உமேஷ் யாதவ் ) உள்பட 23 வீரர்களின் அடிப்படை விலை அதிகபட்சம் ரூ.2 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதில் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் சதம் விளாசிய டிராவிஸ் ஹெட், ஸ்டீவன் சுமித், பேட் கம்மின்ஸ், ஹேசில்வுட், மிட்செல் ஸ்டார்க் (ஆஸ்திரேலியா), ஹாரி புரூக் (இங்கிலாந்து), ஜெரால்டு கோட்ஜீ (தென் ஆப்பிரிக்கா), முஜீப் ரகுமான் (ஆப்கானிஸ்தான்) உள்ளிட்டோர் முக்கியமானவர்கள்.

மேலும், ஷாருக்கான், எம்.சித்தார்த், சந்தீப் வாரியர், ரித்திக் ஈஸ்வரன், பாபா அபராஜித், பிரதோஷ் பால், அஜிதேஷ், பாபா இந்திரஜித், குர்ஜப்னீத் சிங், ஜதாவேத் சுப்ரமணியன், சூர்யா ஆகிய 11 தமிழ்நாட்டு வீரர்களும் ஏலத்தில் இடம் பெற்று உள்ளனர். இதில் பஞ்சாப் கிங்ஸ் அணியில் இருந்து கழற்றி விடப்பட்ட அதிரடி ஆல் ரவுண்டர் ஷாருக்கானின் அடிப்படை விலை 40 லட்ச ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

இந்த ஏலத்தில் உலகக் கோப்பை தொடரில் அசத்திய வீரர்களான ரச்சின் ரவீந்திரா, ஜெரால்டு கோட்ஜீ, டிராவிஸ் ஹெட், மிட்செல் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ் ஆகியோரை ஏலத்தில் எடுக்க கடுமையான போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : ஆப்கானிஸ்தான் வேகப்பந்து வீச்சாளாருக்கு 20 மாதங்கள் தடை! என்ன காரணம் தெரியுமா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.