தமிழ்நாடு

tamil nadu

IPL 2023: கடைசி ஓவரில் மும்பை அணி த்ரில் வெற்றி.. ராஜஸ்தான் அணியின் குசும்பு வீடியோ!

By

Published : May 1, 2023, 7:35 AM IST

மும்பை வான்கடே மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை அணி த்ரில் வெற்றியை பதிவு செய்தது.

Etv Bharat
Etv Bharat

மும்பை: ஐபிஎல் 2023 42வது லீக் போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடந்தது. முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடி சதம் சதம் அடித்தார். இறுதி வரை தாக்குபிடித்த ஜெய்ஸ்வால் 62 பந்துகளில் 124 ரன்களை குவித்து அசத்தினார். மொத்தமாக ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 212 ரன்களை குவித்து மும்பை அணிக்கு 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலங்கை நிர்ணயித்தது.

பின்னர், சொந்த மண்ணில் இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா 3 ரன்களில் அவுட் ஆகி பெரும் ஏமாற்றம் அளித்தார். மற்றொரு தொடக்க வீரர் இஷான் கிஷன் 28 ரன் எடுத்து அவுட் ஆக, கேமரூன் கிரீன் 44 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 55 ரன்களையும் அதிரடியாக குவித்ததால் ஆட்டம் சற்று விறுவிறுப்பு அடைந்தது.

20வது ஓவரில் மும்பை அணிக்கு 17 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ராஜஸ்தான் அணியின் ஹோல்டர் கடைசி ஓவரை வீசினார். இந்த ஓவரின் முதல் 3 பந்துகளை சிக்சருக்கு அனுப்பிய டிம் டேவிட் மும்பை அணியை வெற்றி பெறச் செய்தார். 19 புள்ளி 3 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த மும்பை அணி வெற்றி இலக்கை அடைந்து சொந்த மண்ணில் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை பரிசாக அளித்தது.

இதனிடையே, தோல்வியடைந்த பிறகு ராஜஸ்தான் அணியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள காமெடி வீடியோ பலரது கவனத்தை ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: AK 62: அஜித்தின் 62-வது படம் 'விடாமுயற்சி' - இயக்குநர் யார் தெரியுமா?

ABOUT THE AUTHOR

...view details