தமிழ்நாடு

tamil nadu

IPL 2022 RR vs SRH: பிளேயிங் லெவனில் நட்டு; ராஜஸ்தான் பேட்டிங்

By

Published : Mar 29, 2022, 7:28 PM IST

ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது.

IPL 2022 toss report
IPL 2022 toss report

புனே:ஐபிஎல் 15ஆவது சீசன் கடந்த சனிக்கிழமை (மார்ச் 26) அன்று மும்பையில் தொடங்கியது. நான்கு லீக் ஆட்டங்கள் நிறைவடைந்து தொடர் சூடுப்பிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், ஐந்தாவது லீக் ஆட்டம் புனேயில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் இன்று (மார்ச் 29) நடைபெறுகிறது.

இப்போட்டியில், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதாராபத் அணியும் மோதுகின்றன. டாஸ் வென்ற ஹைதராபாத் அணி கேப்டன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளார். ஐபிஎல்-இல் இரு அணிகளும் இதுவரை 15 போட்டிகளில் மோதியுள்ளன. அதில் 8 போட்டிகளை ஹைதராபாத் அணியும், 7 போட்டிகளை ராஜஸ்தான் அணியும் வென்றுள்ளன.

பிளேயிங் XI

ராஜஸ்தான் ராயல்ஸ்:யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜாஸ் பட்லர், தேவ்தத் படிக்கல், சஞ்சு சாம்சன் (கே), ஷிம்ரன் ஹெட்மயர், ரியான் பராக், நாதன் கோல்டர் நைல், ரவிச்சந்திரன் அஸ்வின், யுஸ்வேந்திர சஹால், டிரென்ட் பவுல்ட், பிரசித் கிருஷ்ணா.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: அபிஷேக் சர்மா, ராகுல் திரிபாதி, கேன் வில்லியம்சன் (கே), எய்டன் மார்க்ரம், நிக்கோலஸ் பூரன், அப்துல் சமத், ரொமாரியோ ஷெப்பர்டு, வாஷிங்டன் சுந்தர், புவனேஷ்வர் குமார், உம்ரான் மாலிக், டி நடராஜன்.

இதையும் படிங்க: ஐபிஎல் 2022: இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான்-ஹைதராபாத் பலபரீட்சை

ABOUT THE AUTHOR

...view details