ETV Bharat / sports

ஐபிஎல் 2022: இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான்-ஹைதராபாத் பலபரீட்சை

author img

By

Published : Mar 29, 2022, 7:28 AM IST

ஐபிஎல் 2022ஆம் தொடரின் இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ்-சன்ரைசஸ் ஹைதராபாத் அணிகள் பலபரீட்சை நடத்துகின்றன.

tata-ipl-2022-srh-vs-rr-match-5
tata-ipl-2022-srh-vs-rr-match-5

மகாராஷ்டிராவில் ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசன் நடைபெற்று வருகிறது. இதுவரை நான்கு லீக் ஆட்டங்கள் முடிந்துள்ளன. இன்று ஐந்தாவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ்-சன்ரைசஸ் ஹைதராபாத் அணிகள் பலபரீட்சை நடத்துகின்றன. இந்தப்போட்டி புனே எம்சிஏ சர்வதேச மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் காணலாம்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர்கள்: ராகுல் திரிபாதி, அபிஷேக் சர்மா, கேன் வில்லியம்சன் (கேப்டன்), நிக்கோலஸ் பூரன் (கீப்பர்), ஐடன் மார்க்ரம், அப்துல் சமத், வாஷிங்டன் சுந்தர், புவனேஷ்வர் குமார், மார்கோ ஜான்சன், உம்ரான் மாலிக், டி நடராஜன்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், தேவ்தத் படிக்கல், ஜோஸ் பட்லர் (கீப்பர்), சஞ்சு சாம்சன் (கேப்டன்), ஷிம்ரோன் ஹெட்மியர், ரஸ்ஸி வான் டெர் டுசென், ரியான் பராக், ஜேம்ஸ் நீஷம், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரெண்ட் போல்ட், யுஸ்வேந்திர சாஹல், பிரசித் கிருஷ்ணா.

இதையும் படிங்க: ஐபிஎல் 2022: 5 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோவை வீழ்த்திய குஜராத் டைட்டன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.