தமிழ்நாடு

tamil nadu

SRH vs RCB: டாஸ் வென்ற பெங்களூரு பேட்டிங் தேர்வு

By

Published : May 8, 2022, 3:30 PM IST

ஐபிஎல் தொடரின் 54ஆவது லீக் ஆட்டத்தில் ஹைதராபாத் அணிக்கு எதிராக டாஸ் வென்ற பெங்களூரு அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

ipl-2022-rcb-win-toss-elect-to-bat-against-srh
ipl-2022-rcb-win-toss-elect-to-bat-against-srh

மும்பை: ஐபிஎல் தொடரின் 54ஆவது லீக் ஆட்டத்தில் கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ஃபாஃப் டு பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த ஆட்டம் வான்கடே மைதானத்தில் பிற்பகல் (மே 8) 3:30 மணிக்கு தொடங்குகிறது.

முதலில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இதுகுறித்து அந்த அணியின் கேப்டன் ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ் கூறுகையில் "நாங்கள் பேட்டிங் செய்ய முடிவெடுத்துள்ளோம். நாங்கள் பந்துவீச்சில் பலமாக உள்ளதால், இந்த முடிவை எடுத்துள்ளோம். எங்களுக்கு முகமது சிராஜ் பக்கபலமாக இருப்பார்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: அபிஷேக் சர்மா, கேன் வில்லியம்சன்(கேப்டன்), ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ரம், நிக்கோலஸ் பூரன்(கீப்பர்), ஷஷாங்க் சிங், ஜகதீஷா சுசித், கார்த்திக் தியாகி, புவனேஷ்வர் குமார், ஃபசல்ஹாக் ஃபரூக்கி, உம்ரான் மாலிக்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), ரஜத் படிதார், கிளென் மேக்ஸ்வெல், மஹிபால் லோம்ரோர், தினேஷ் கார்த்திக் (கீப்பர்), ஷாபாஸ் அகமது, வனிந்து ஹசரங்கா, ஹர்ஷல் படேல், முகமது சிராஜ், ஜோஷ் ஹேசில்வுட்.

இதையும் படிங்க:CSK vs DC: இன்றைய ஆட்டம் சென்னை சூப்பர் கிங்ஸ் vs டெல்லி கேப்பிடல்ஸ்

ABOUT THE AUTHOR

...view details