தமிழ்நாடு

tamil nadu

IPL 2022: முடிந்தது லீக் சுற்று - ஆறுதல் போட்டியில் பஞ்சாப் வெற்றி!

By

Published : May 23, 2022, 8:00 AM IST

ஹைதராபாத் அணிக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில், பஞ்சாப் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 14 புள்ளிகளுடன் 6ஆவது இடத்தில் நிறைவுசெய்தது.

Punjab Kings beat Sunrisers Hyderabad
Punjab Kings beat Sunrisers Hyderabad

மும்பை:நடப்பு ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்கு குஜராத், ராஜஸ்தான், லக்னோ, பெங்களூரு ஆகிய அணிகள் தகுதிபெற்றுவிட்டன. பிளே ஆஃப் சுற்று போட்டி நாளை (மே 24) முதல் தொடங்க உள்ள நிலையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் லீக் சுற்றின் கடைசிப் போட்டியில் நேற்று (மே 22) மோதின.

கேன் வில்லியம்சன் சொந்த காரணங்களுக்காக நியூசிலாந்து சென்ற நிலையில், நேற்றைய போட்டியில் ஹைதராபாத் அணி கேப்டனாக புவனேஷ்வர் குமார் செயல்பட்டார். சம்பர்தாய போட்டியாக பார்க்கப்பட்ட இப்போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது. ஹைதராபாத் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி, 158 ரன்களை இலக்காக நிர்ணயித்த நிலையில், லியம் லிவிங்ஸ்டனின் அதிரடியால் 15.1 ஓவர்களிலேயே பஞ்சாப் அணி இலக்கை அடைந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

லிவிங்ஸ்டன் 5 சிக்ஸர், 2 பவுண்டரி என 22 பந்துகளில் 49 ரன்களை குவித்து ஹைதராபாத் பந்துவீச்சை தூள் தூளாக்கினார். மேலும், ஆட்டநாயகன் விருதையும் தட்டிச்சென்றார். முதலில் விளையாடிய ஹைதராபாத் அணிக்கு அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 43, ரோமாரியோ ஷெப்பேர்டு 26, வாஷிங்டன் 25 ரன்களை எடுத்தனர். பஞ்சாப் பந்துவீச்சில் ஹர்பீரித் பிரர், நாதன் எல்லிஸ் தலா 3 விக்கெட்டை கைப்பற்றினர்.

லீக் சுற்று போட்டிகள் நிறைவடைந்துவிட்ட நிலையில், பஞ்சாப் அணி 14 புள்ளிகளுடன் 6ஆவது இடத்திலும், சன்ரைசர்ஸ் அணி 12 புள்ளிகளுடன் 8ஆவது இடத்திலும் தொடரை நிறைவு செய்தன. ஐபிஎல் தொடரில் இன்றைய தினம் போட்டி ஏதும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இந்திய அணியில் மீண்டும் தினேஷ் கார்த்திக் - ரசிகர்கள் மகிழ்ச்சி!

ABOUT THE AUTHOR

...view details