தமிழ்நாடு

tamil nadu

ஐபிஎல் 2022: இன்றைய ஆட்டம் பெங்களூரு vs ஹைதராபாத்

By

Published : Apr 23, 2022, 5:24 PM IST

ஐபிஎல் தொடரின் 36ஆவது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.

IPL 2022 Match 36 RCB vs SRH Royal Challengers Bangalore vs Sunrisers Hyderabad
IPL 2022 Match 36 RCB vs SRH Royal Challengers Bangalore vs Sunrisers Hyderabad

மும்பை: ஐபிஎல் தொடரின் 36ஆவது ஆட்டம் இன்றிரவு 7:30 மணிக்கு பிராபோர்ன் மைதானத்தில நடக்கிறது. இதில் ஃபாஃப் டு பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன், கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மோதுகிறது.

பெங்களூரு அணி மொத்தம் 7 போட்டிகளில் 5 வெற்றி 2 தோல்வி என்ற கணக்கில் புள்ளிப்பட்டியலில் 3ஆவது இடத்தில் உள்ளது. மறுப்புறம் ஹைதராபாத் அணி மொத்தம் 6 போட்டிகளில் 4 வெற்றி 2 தோல்வி என்ற கணக்கில் 5ஆவது இடத்தில் உள்ளது. இந்த போட்டியில் பெங்களூரு அதிக ரன்களை குவித்து வெற்றிபெற்றால் முதல் இடத்தை பிடிக்க வாய்ப்புள்ளது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: அனுஜ் ராவத், ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), விராட் கோலி, கிளென் மேக்ஸ்வெல், சுயாஷ் பிரபுதேசாய், ஷாபாஸ் அகமது, தினேஷ் கார்த்திக் (கீப்பர்), ஹர்சல் படேல், வனிந்து ஹசரங்க டி சில்வா, ஜோஷ்ஹம் ஹசில்வூட்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: அபிஷேக் சர்மா, கேன் வில்லியம்சன் (கேப்டன்), ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ரம், நிக்கோலஸ் பூரன் (கீப்பர்), ஷஷாங்க் சிங், ஜகதீஷா சுசித், புவனேஷ்வர் குமார், மார்கோ ஜான்சன், டி நடராஜன், உம்ரான் மாலிக்.

இதையும் படிங்க:என்ன நடந்தது கடைசி ஓவரில்? அன்று தோனி - இன்று பந்த்!

ABOUT THE AUTHOR

...view details