தமிழ்நாடு

tamil nadu

CSK vs GT: சென்னை பேட்டிங்; குஜராத்தில் ஹர்திக் கிடையாது!

By

Published : Apr 17, 2022, 7:25 PM IST

ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில், டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. குஜராத் அணி கேப்டன் ஹர்திக் காயம் காரணமாக விலகினார்.

CSK vs GT
CSK vs GT

மும்பை:15ஆவது ஐபிஎல் சீசன் கடந்த மார்ச் 28ஆம் தேதி தொடங்கிய நிலையில், லீக் ஆட்டங்கள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன. இன்று (ஏப். 17) இரண்டு லீக் போட்டிகள் நடக்கின்றன. பஞ்சாப் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் மோதும் முதல் போட்டி நவி மும்பையில் நடைபெற்றுவருகிறது.

ஹர்திக்குக்கு காயம்:இரண்டாவது ஆட்டம், புனேவின் எம்சிஏ மைதானத்தில் நடக்கிறது. இதில் குஜராத் டைட்டனஸ் அணியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதுகிறது. முதலில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக இந்த போட்டியிலிருந்து விலகினார். அவருக்கு பதிலாக ரஷித் கான் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளார். மேத்யூ வேட் நீக்கப்பட்டு, அல்ஸாரி ஜோசப், விருத்திமான் சாஹா ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. சென்னை அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

சென்னை சூப்பர் கிங்ஸ்: ராபின் உத்தப்பா, ருதுராஜ் கெய்க்வாட், மொயீன் அலி, ஷிவம் துபே, அம்பதி ராயாடு, எம்.எஸ். தோனி, ரவீந்திர ஜடேஜா, டூவைன் பிராவோ, தீக்ஷனா, முகேஷ் சவுத்ரி, கிறிஸ் ஜோர்டான்.

குஜராத் டைட்டன்ஸ்: விருத்திமான் சாஹா (கீப்பர்), சுப்மன் கில், அபினவ் மனோகர், விஜய் சங்கர், டேவிட் மில்லர், ராகுல் திவாட்டியா, அல்ஸாரி ஜோசப், ரஷித் கான் (கேப்டன்), முகமது ஷமி, லாக்கி பெர்குசன், யாஷ் தூல்.

இதையும் படிங்க: PBKS vs SRH: உம்ரான் வேகத்தில் பஞ்சரானது பஞ்சாப்!

ABOUT THE AUTHOR

...view details