தமிழ்நாடு

tamil nadu

IPL 2021: டெல்லியின் பவர் பேட்டிங்கை கட்டுப்படுத்திய ராஜஸ்தான்

By

Published : Sep 25, 2021, 6:06 PM IST

IPL 2021
IPL 2021 ()

ராஜஸ்தான் அணிக்கு எதிரான லீக் போட்டியில், டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 154 ரன்களை எடுத்துள்ளது.

அபுதாபி: 'இந்தியன் பிரீமியர் லீக்' எனப்படும் ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கியது. வீரர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டதால், தொடர் பாதியில் ரத்துசெய்யப்பட்டது. இதையடுத்து, எஞ்சியுள்ள போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டது.

இதையடுத்து, இரண்டாம் கட்டப் போட்டிகள் செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்கின. இந்நிலையில், 36ஆவது லீக் ஆட்டத்தில் ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணி, சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் இன்று (செப். 25) மோதுகிறது.

ஆட்டம் கண்ட தொடக்கம்

இப்போட்டியில், டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன், முதலில் டெல்லி அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். அதன்படி, வழக்கம்போல் டெல்லி அணிக்கு பிருத்வி ஷா, ஷிகர் தவான் ஜோடி தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

கடந்த போட்டியில் மிரட்டிய தவான், இப்போட்டியில் 8 (8) ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து பிருத்வி ஷா 10 (12) ரன்களுக்கு நடையைக்கட்ட, ஸ்ரேயஸ் ஐயருடன் கேப்டன் ரிஷப் பந்த் ஜோடி சேர்ந்தார்.

3ஆவது விக்கெட் பார்ட்னர்ஷிப்

இந்த ஜோடி, மூன்றாவது விக்கெட்டுக்கு 62 ரன்கள் சேர்த்து அசத்தியது. ரிஷப் பந்த் 24 (24) ரன்களுக்கும், ஸ்ரேயஸ் 43 (32) ரன்களுக்கும் வெளியேறினர்.

இதன்பின்னர், களமிறங்கிய ஹெட்மயர் 5 பவுண்டரிகள் உள்பட 28 (16) ரன்களுக்கும், அக்சர் படேல் 12 (7) ரன்களுக்கும் ஆட்டமிழக்க, டெல்லி அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்களை எடுத்தது. லலித் யாதவ் 14 (15) ரன்களுடனும், ரவிச்சந்திரன் அஸ்வின் 6 (6) ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

ராஜஸ்தான் அணி பந்துவீச்சு தரப்பில் முஸ்தபிஷூர், சக்காரியா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும், கார்த்திக் தியாகி, திவாத்தியா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இதையும் படிங்க: குளிக்காத மனைவி; விவாகரத்து கேட்டு கதறும் கணவர்

ABOUT THE AUTHOR

...view details