தமிழ்நாடு

tamil nadu

மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சென்னை பந்துவீச்சு!

By

Published : Apr 3, 2019, 7:50 PM IST

Updated : Apr 3, 2019, 9:04 PM IST

மும்பை : சென்னை - மும்பை அணிகளுக்கு இடையேயான போட்டியில், டாஸ் வென்ற சென்னை அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

csk

இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை - மும்பை அணிகள் மோதுகின்றன. ஐபிஎல் தொடர்களில் பரம எதிரிகளாகக் கருதப்படும் இவ்விரு அணிகளும் நேருக்கு நேர் மோதுவதால் இந்த போட்டிக்கு ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சென்னை அணி இந்த தொடரில் விளையாடியுள்ள மூன்று போட்டிகளிலும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிபெற்றுள்ளதால் இந்தப் போட்டியிலும், சென்னை அணியின் வெற்றி தொடருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதேபோல், மூன்று போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை அணி, இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்து ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில், இந்தப்போட்டி மும்பை மைதானத்தில் நடைபெறுவதால் மும்பை அணி மிகப்பெரிய ஆட்டத்தை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மும்பை அணியில் டி காக் ,ரோஹித் ஷர்மா, யுவராஜ் சிங், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா என நட்சத்திர பட்டாளமே இருந்தாலும், மிகப்பெரிய ஆட்டத்தை வெளிப்படுத்த தவறி வருகின்றனர். பந்துவீச்சில் பும்ரா, மார்கண்டே, மலிங்கா ஆகியோர் சிறப்பாக செயல்படுகின்றனர்.

சென்னை அணியைப் பொறுத்தவரையில், வாட்சன், ரெய்னா, தோனி, பிராவோ ஆகியோர் சிறப்பாக ஆடினாலும் ராயுடு ஃபார்மில் இல்லாதது பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனை இப்போட்டியில் சரிசெய்வார் என எதிர்பார்க்கலாம். பந்துவீச்சில் தாஹிர், ஹர்பஜன், இறுதி ஓவர் ஸ்பெஷலிச்ட் பிராவோ, தீபக் சாஹர் சிறந்த பங்களிப்பை அளித்து வருகின்றனர்.

இன்றையப் போட்டியில் மும்பை அணி மெக்லனகனுக்கு பதிலாக பெஹரண்டாஃப்-ம், மார்கண்டே-க்கு பதிலாக ராகுல் சஹார் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

சென்னை அணியும் கடந்த போட்டியில் ஆடிய சாண்ட்னருக்கு பதிலாக மோஹித் ஷர்மா இடம்பெற்றுள்ளார்.

அண்ணன் தீபக் சஹார் - தம்பி ராகுல் சஹார் எதிரணியில் களமிறங்குவதால் ரசிகர்கள் இவ்விருவரிடையே யார் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கின்றனர்.

சென்னை அணி விவரம் :

எம்.எஸ்.தோனி(கேப்டன்), ஷேன் வாட்சன், அம்பதி ராயுடு, சுரேஷ் ரெய்னா, கேதர் ஜாதவ், பிராவோ, ஜடேஜா, தாக்கூர், இம்ரான் தாஹீர், மோஹித் ஷர்மா, தீபக் சஹார்.

மும்பை அணி விவரம் :

ரோஹித் ஷர்மா (கேப்டன்), டி காக், சூர்யகுமார் யாதவ், யுவராஜ் சிங், ஹர்திக் பாண்டியா, குருணால் பாண்டியா, ராகுல் சஹார், பும்ரா, மலிங்கா, பொல்லார்ட், பெஹ்ரண்டாஃப்.

Intro:Body:

CSK vs MI toss


Conclusion:
Last Updated :Apr 3, 2019, 9:04 PM IST

ABOUT THE AUTHOR

...view details