தமிழ்நாடு

tamil nadu

IND vs IRE: தீவிர வலைப்பயிற்சியில் ஜஸ்பிரித் பும்ரா......வைரல் விடியோ!

By

Published : Aug 17, 2023, 12:48 PM IST

Bumrah Net Practice: ஜஸ்பிரித் பும்ரா தலைமையிலான இந்திய அணி நாளை அயர்லாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியை விளையாடுகிறது.

ஜஸ்பிரித் பும்ரா
Jasprit Bumrah

டப்ளின்: இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த நிலையில், அடுத்ததாக அயர்லாந்து சுற்றுபயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் விளையாட உள்ளது. இதில் ஹர்திக் பாண்டியா, ஷுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் உள்ளிட்ட வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடருக்கு வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 29 வயதுடைய இவர் கடைசியாக 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25ம் தேதி ஹைதராபாத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டியில் விளையாடினார். அதில் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஒரு நாள் உலக கோப்பை நெருக்கும் நிலையில், தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு பும்ரா காயத்தில் இருந்து மீண்டது இந்திய ரசிகர்களுக்கு மிகவும் ஆறுதலை அளிக்கிறது.

இதையும் படிங்க:தடையில்லா சான்றிதழ் பெறாமல் அமெரிக்கா சென்ற வீரர்கள்.. விளக்கம் கேட்டு பாக். கிரிக்கெட் வாரியம் நேட்டீஸ்!

இந்நிலையில் தற்போது அயர்லாந்துக்கு எதிரான டி20 போட்டியை வேகப்பந்து வீச்சாளர் பும்ரா தலைமையில் எதிர்கொள்கிறது. துணை கேப்டனாக ரூதுராஜ் கெய்க்வாட் நியமிக்கபாட்டுள்ளார். மேலும், இளம் வீரர்களான ரிங்கு சிங், ஜிதேஷ் சர்மா, சிவம் துபே, ஷாபாஸ் அகமது, ரவி பிஷ்னோய், பிரசித் கிருஷ்ணா, ஆவேஷ் கான் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். இந்த தொடருக்காக இந்திய அணி நேற்றய முந்தினம் விமானம் மூலம் அயர்லாந்து சென்றது.

மேலும், காயத்தில் இருந்து மீண்டு வந்த வேகப்பந்து வீச்சாளரும் கேப்டனுமான ஜஸ்பிரித் பும்ரா வலைபயிற்சியில் ஈடுபடுவதை பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டது. பயிற்சியின் போது பும்ரா பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் இந்திய அணியின் இளம் வீரர்கள் திணறினர். இந்தியா - அயர்லாந்து இடையிலான முதல் டி20 போட்டி நாளை இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது.

இந்திய அணி விபரம்: ஜஸ்பிரித் பும்ரா (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரிங்கு சிங், சஞ்சு சாம்சன் (விகீ), ஜிதேஷ் சர்மா (விகீ), சிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், ஷாபாஸ் அகமது, ரவி பிஷ்னோய், பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார், அவேஷ் கான்.

அயர்லாந்து அணி விபரம்: பால் ஸ்டிர்லிங் (கேப்டன்), ஆண்ட்ரூ பால்பிர்னி, மார்க் அடேர், ராஸ் அடேர், கர்டிஸ் கேம்பர், கரேத் டெலானி, ஜார்ஜ் டாக்ரெல், ஃபியோன் ஹேண்ட், ஜோஷ் லிட்டில், பேரி மெக்கார்த்தி, ஹாரி டெக்டர், லோர்கன் டக்கர், தியோ வான் வொர்காம், பென் ஒயிட், கிரேக் யங்.

இதையும் படிங்க:Ben Stokes: ஓய்வு முடிவை திரும்ப பெற்ற பென் ஸ்டோக்ஸ்... காரணம் என்ன?

ABOUT THE AUTHOR

...view details