தமிழ்நாடு

tamil nadu

IND VS WI:150 ரன்களுக்கு சுருண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி-அஸ்வின் புதிய சாதனை!

By

Published : Jul 13, 2023, 11:06 AM IST

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் வெஸ்ட் இண்டீஸ் அணி 150 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.

இந்தியா வெஸ்ட் இண்டிஸ்
ind vs wi

டொமினிகா: இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையே ஆன 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம் நேற்று (புதன்கிழமை) டொமினிகாவில் உள்ள விண்ட்சர் பார்க் மைதானத்தில் வைத்து நடைபெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதனை தொடர்ந்து களம் இறங்கிய டெஜ்நரேன் சந்தர்பால் 12 ரன்களில் வெளியேற, உடன் வந்த கிரெய்க் பிராத்வெயிட் (கேப்டன்) 3 பவுண்டரிகளுடன் 20 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை அஸ்வினிடம் பறிகொடுத்தார். அதன் பின் இறங்கிய ரேமன் ரீஃபர் 2 ரன்களிலும், பிளாக்வுட் 1 பவுண்டரிகளுடன் 14 ரன்களிலும், ஜோஷுவா டா சில்வா 2 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினர்.

அதன் பின் வந்த ஹோல்டர் 1 பவுண்டரியுடன் 18 ரன்களும், அல்ஜாரி ஜோசஃப் 1 பவுண்டரியுடன் 4 ரன்களும், எடுத்து வெளியேறினர். இந்திய அணியின் பந்து வீச்சுக்கு தனது அணியே திணறி வந்த நிலையில், அலிக் அதானஸி பொறுமையாக விளையாடி 6 பவுண்டரிகளும், 1 சிக்சர்களுடன் 47 ரன்கள் எடுத்து அஸ்வின் சுழலில் ஆட்டமிழந்தார்.

அதனை தொடர்ந்து ஆடிய கெமர் ரோச் 1, வாரிக்கன் 1 ரன்கள் எடுத்து ஆவுட் ஆகினர். கார்ன்வால் 3 பவுண்டரிகளுடன் 19 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். முதல் இன்னிங்கிஸ் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 150 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்தியாவின் பந்து வீச்சில் அஸ்வின் 5 விக்கெட்களும், ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்களும், சிராஜ் மற்றும் தாக்குர் தலா 1 விக்கெட்களும் எடுத்தனர்.

இதனை தொடர்ந்து இந்தியா அணி தனது முதல் இன்னிங்ஸை ரோஹித் சர்மா (கேப்டன்), யாஜஸ்வி ஜெய்ஸ்வால் தொடங்கினர். ரோஹித் சர்மா 3 பவுண்டரிகள், 1 சிக்சருடன் 30 ரன்களும், ஜெய்ஸ்வால் 6 பவுண்டரிகளுடன் 40 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் சிறப்பாக ஆடி வருகின்றனர். இந்தியா அணி முதல் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 80 ரன்கள் எடுத்துள்ளது.

இந்நிலையில், சுழல் பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், சர்வதேச கிரிக்கெட்டில் 700 விக்கெட்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார். இத்துடன் 700 விக்கெட்கள் வீழ்த்திய 3வது இந்திய வீரர் ஆவார். இந்த பட்டியலில் கும்ப்ளே மற்றும் ஹர்பஜன் சிங் இடம் பெற்றுள்ள நிலையில் அஸ்வின் இணைந்து உள்ளார். மேலும், தற்போது விளையாடி வரும் வீரர்களில் 5 விக்கெட்களை அதிக முறை எடுத்த வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.

அப்பா மகன் விக்கெட்டை வீழ்த்திய அஸ்வின்.

டெஜ்நரேன் சந்தர்பால் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம், சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அப்பா, மகன் விக்கெட்டை வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். முன்னதாக கடந்த 2011 மற்றும் 2013 ஆண்டுகளில் சிவ்நரைன் சந்தர்பாலை அஸ்வின் அவுட்டாக்கினார். அதனைத்தொடர்ந்து அவரது மகனான டெஜ்ந்ரேன் சந்தர்பால் விக்கெட்டை எடுத்து அசத்தியுள்ளார்.

சர்வதேச டெஸ்ட் கிரிகெட்டில் அறிமுகம்:

இந்த ஆட்டத்தின் மூலம் இந்திய அணியில் அறிமுக வீரர்களாக ஜெய்ஸ்வால், இஷான் கிஷன்(விக்கெட் கீப்பர்) ஆடிவருகின்றனர். இதேபோல் வெஸ்ட் இண்டிஸ் அணியில் அலிக் அதானஸி விளையாடுகிறார்.

இதையும் படிங்க:IND Vs WI : இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் முதலாவது டெஸ்ட்... டாஸ் வென்று மே.தீவுகள் பேட்டிங்!

ABOUT THE AUTHOR

...view details