தமிழ்நாடு

tamil nadu

1000th ODI: இந்தியா பந்துவீச்சு; அறிமுகமாகவும் தீபக் ஹூடா

By

Published : Feb 6, 2022, 1:37 PM IST

மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சு தேர்வுசெய்துள்ளது.

1000th ODI
1000th ODI

அகமாதாபாத்: இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி மூன்று ஒருநாள், மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது.

ஒருநாள் தொடரின் முதல் போட்டி குஜராத் தலைநகர் ஆமதாபாத்தில் இன்று மதியம் தொடங்குகிறது. இப்போட்டியில், டாஸை வென்ற இந்திய கேப்டன் ரோஹித் சர்மா பந்துவீச்சை தேர்வுசெய்தார்.

கறும்பட்டை அணியும் இந்தியா

மேலும், இந்திய அணி சார்பில் தீபக் ஹூடா இப்போட்டியின் மூலம் சர்வதேச அரங்கில் அறிமுகமாகிறார். மேலும், இன்று மறைந்த பாடகி லதா மங்கேஷ்கரின் நினைவாக இந்திய வீரர்கள் கைகளில் கறும்பட்டைகள் அணிந்து விளையாட உள்ளனர்.

இந்தப் போட்டி, இந்திய அணியின் 1000ஆவது ஒருநாள் போட்டியாகும். மேலும், 1000ஆவது போட்டியை விளையாடும் முதல் அணி என்ற பெருமையை பெற்றுள்ளது. இந்திய அணிக்கு அடுத்து, ஆஸ்திரேலியா 958 போட்டிகளையும், பாகிஸ்தான் 936 போட்டிகளையும் விளையாடியுள்ளது.

ஒருநாள் அரங்கில், இந்தியா இதுவரை 518 போட்டிகளில் வெற்றி பெற்று, 431 போட்டிகளில் தோல்வியைத் தழுவியுள்ளது. 9 போட்டிகள் டிராவிலும், 41 போட்டிகள் முடிவுகள் அறிவிக்கப்படவில்லை. கூடுதலாக, 1983 மற்றும் 2011 என இரண்டு முறை உலகக்கோப்பை இந்தியா வென்றுள்ளது.

அணிகளின் வீரர்கள் விவரம்

இந்தியா:ரோஹித் சர்மா, இஷான் கிஷன், விராட் கோலி, ரிஷப் பந்த், சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், யுஸ்வேந்திர சஹால், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ்

மேற்கிந்திய தீவுகள்:கைரன் பொல்லார்ட், பிராண்டன் கிங், ஷாய் ஹோப், ஷமர் ப்ரூக்ஸ், டேரன் பிராவோ, நிக்கோலஸ் பூரன், ஃபாப்பியன் ஆலன், ஆல்ஸாரி ஜோசப், கீமர் ரோச், அகேல் ஹொசைன்.

இதையும் படிங்க: IND vs WI ODI: லதா மங்கேஷ்கர் நினைவாக கறும்பட்டை அணியும் இந்திய வீரர்கள்

ABOUT THE AUTHOR

...view details