தமிழ்நாடு

tamil nadu

2023 ICC World Cup: பாகிஸ்தானை வீழ்த்தி 93 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 11, 2023, 11:08 PM IST

2023 ஐசிசி உலகக் கோப்பை போட்டியின் 44வது ஆட்டத்தில் பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று (நவ.11) நடைபெற்றது. இதில் 93 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை இங்கிலாந்து அணி வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.

2023 ICC World Cup
பாகிஸ்தானை வீழ்த்தி 93 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி!

ஈடன் கார்டன் (கொல்கத்தா): 2023 ஐசிசி உலகக் கோப்பை போட்டியின் 44வது ஆட்டத்தில் பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று (நவ.11) நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோஷ் படலர் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்யத் தொடங்கிய இங்கிலாந்து அணி 50 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்கள் இழப்பிற்கு 337 ரன்களை குவித்தது. இங்கிலாந்து அணியின் வீரர் பென் ஸ்டோக்ஸ் சிறப்பாக பேட்டிங் செய்து 84 ரன்கள் எடுத்தார். ஜோ ரூட் 60 ரன்களும் ஜானி பேர்ஸ்டோ 59 ரன்கள் எடுத்தனர். பாகிஸ்தான் பவுலர்களில் ஹரிஸ் ராப் சிறப்பாகப் பந்து வீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஷாகின் அப்ரிடி மற்றும் முகமது வாசிம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.

இந்த நிலையில் பாகிஸ்தான் அரையிறுதி வாய்ப்பை பெற வேண்டுமானால் 337 ரன்களை 6.4 ஓவரில் சேஸ் செய்ய வேண்டும் மேலும் குறைந்தது 188 ரன்கள் எடுத்தால் மட்டுமே டாப் 5 இடத்தில் நீடிக்க முடியும் என்ற நிலையில் பாகிஸ்தான் அணியினர் களமிறங்கினர்.

பாகிஸ்தான் அணியின் சார்பாக முதலில் பேட்டிங் இறங்கிய அப்துல்லா ஷபீக் மற்றும் ஃபகார் ஜமான் களமிறங்கி மிக சொர்ப்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து பாகிஸ்தான் அணி 244 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது. பாகிஸ்தான் அணியின் வீரர் ஆகா சல்மான் அதிக பட்சமாக 51 ரன்கள் எடுத்தார்.

இங்கிலாந்து பவுலர்களில் டேவிட் வில்லி சிறப்பாகப் பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அடில் ரஷித், கஸ் அட்கின்சன் மற்றும் மொயின் அலி ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்கு எதிராக வெற்றி பெற்றாலும் அரையிறுதிக்குச் செல்லக் கூடிய வாய்ப்பு இல்லாமலே இருந்து குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்திய ஆஸ்திரேலியா!

ABOUT THE AUTHOR

...view details