தமிழ்நாடு

tamil nadu

'தவறுகளை ஒப்புக்கொண்டு சரியான நோக்கத்துடன் வீரர்கள் மீண்டு வரவேண்டும்' - கோலி

By

Published : Mar 13, 2021, 1:38 PM IST

அகமதாபாத்: "தவறுகளை ஒப்புக்கொண்டு சரியான நோக்கத்துடன் இந்திய வீரர்கள் மீண்டு வர வேண்டும்" என இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் அடைந்த தோல்விக்குப் பின்னர் கேப்டன் விராத் கோலி தெரிவித்துள்ளார்.

virat kohli
விராத் கோலி

மொடீரா மைதானத்தில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழத்தியது. இதன் பின்னர் பேசிய இந்திய கேப்டன் விராட் கோலி, "இந்த ஆடுகளத்தில் எந்த மாதிரியான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதை அறியாமல் விளையாடினோம். சரியான ஷாட்களை தேர்ந்தெடுத்து ஆடுவதில் இனி கவனமாக இருக்க வேண்டும்.

வீரர்கள் அனைவரும் தங்களது தவறுகளை ஒப்புக்கொண்டு அடுத்த போட்டியில் சரியான நோக்கத்துடன் மீண்டு வர வேண்டும். பந்து வீச்சாளர்கள் விரும்பும் ஷாட்களை ஆடாமல், தெளிவாக நாம் விரும்பும் ஷாட்களை பேட்ஸ்மேன்கள் ஆட வேண்டும்" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்றவாறு தொடக்கத்திலிருந்து ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். ஷ்ரேயாஸ் அவ்வாறு சரியாகக் கணித்து ஆடியதால் கெளரவமான ஸ்கோரை எட்டினோம். இந்தத் தோல்வியை எளிதாக எடுத்துக்கொள்ள மாட்டோம்" என்று கூறினார்.

இந்திய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, டெஸ்ட் தொடருக்குப் பிறகு தற்போது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கிடையேயான முதல் டி20 போட்டி மொடீரா மைதானத்தில் நடைபெற்றது.

இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவரில் 124 ரன்கள் மட்டுமே எடுத்து 7 விக்கெட்டுகளை இழந்தது. இதைத்தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணி, 15.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து 130 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இந்தியா-இங்கிலாந்து இடையேயான இரண்டாவது டி20 போட்டி மொடீரா மைதானத்தில் நாளை (மார்ச் 14) நடைபெறவுள்ளது.

இதையும் படிங்க: கத்தார் ஓபன்: காலிறுதிச்சுற்றில் வெளியேறிய ஃபெடரர்!

ABOUT THE AUTHOR

...view details