தமிழ்நாடு

tamil nadu

இந்திய பந்துவீச்சாளர்களை தொடர்ந்து பயமுறுத்தும் டெய்லெண்டர்கள்!

By

Published : Mar 2, 2020, 8:25 PM IST

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்ததற்கு, இந்திய பந்துவீச்சாளர்கள் நியூசிலாந்து அணியின் டெய்லெண்டர்களை ரன்கள் சேர்க்கவிட்டது மிக முக்கியக் காரணமாக அமைந்தது.

world-class-indian-bowlers-learnt-art-of-cleaning-the-tail
world-class-indian-bowlers-learnt-art-of-cleaning-the-tail

பும்ரா, ஷமி, இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ் என இந்திய அணி மிகச்சிறந்த நான்கு வேகப்பந்து வீச்சாளர்களைக் கொண்டுள்ளது. இந்த நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள் அளவிற்கு, இதற்கு முன் சரியான பந்துவீச்சாளர்கள் கூட்டணி இந்திய அணிக்கு அமைந்ததே இல்லை. துல்லியத்திற்கும் வெரைட்டிக்கும் பும்ரா, எதிரணியினருக்கு அழுத்தம் கொடுப்பதற்கு இஷாந்த், பவுன்சர்களுக்கும் யார்க்கர்களுக்கும் ஷமி, வேகத்திற்கு உமேஷ் என உலக பேட்ஸ்மேன்களை நடுங்க வைக்கும் வேகப்பந்து வீச்சாளர்கள்களை இந்திய அணி கொண்டுள்ளது.

ஆனால் இந்த நான்கு பேர் கொண்ட இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் கூட்டணிக்கு, டெய்லெண்டர்கள் என்றால் பயம் தொற்றிக் கொள்கிறது. இந்த நியூசிலாந்து தொடரில் 8ஆவது விக்கெட் பாட்னர்ஷிப்பின் ஆவரேஜ் ரன்கள் 34.16. இரண்டு முறை 8ஆவது விக்கெட்டிற்கு 50க்கும் மேற்பட்ட ரன்களை குவித்துள்ளனர்.

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஜேமிசன் - வாக்னர் இணை சேர்ந்து 51 ரன்கள் சேர்த்து இந்திய அணியின் முன்னிலையை குறைக்க மிகமுக்கியக் காரணமாக அமைந்தனர். இந்தத் தொடர் மட்டுமல்லாது, இங்கிலாந்து சுற்றுப் பயணத்தின்போது சாம் கரண் டெய்லெண்டர்களோடு சேர்ந்து ஆடிய ஆட்டம் தான் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் தொடரை இழக்க முக்கியக் காரணமாக அமைந்தது.

2014-15ஆம் ஆண்டில் நடந்த இங்கிலாந்து தொடரின் போது டெய்லெண்டர்களின் ஆவரேஜ் 42.92, அதேபோல் ஆஸ்திரேலியத் தொடரில் டெய்லெண்டர்களின் ஆவரேஜ் 43.50.

டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை எளிதாக வீழ்த்தும் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள், டெய்லெண்டர்களையும் வேகமாக விக்கெட் வீழ்த்தக் கற்றுக்கொள்ள வேண்டும் என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:ஒருநாள் போட்டிகளில் 240 பந்துகள் வீசி, ஒரு விக்கெட்டும் எடுக்காத பும்ரா!

ABOUT THE AUTHOR

...view details