தமிழ்நாடு

tamil nadu

மழையால் ரத்தான கடைசி லீக் போட்டி... முதலிடம் பிடித்த தென் ஆப்பிரிக்கா!

By

Published : Mar 3, 2020, 10:58 PM IST

சிட்னி: மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரில் நடக்கவிருந்த வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான கடைசி லீக் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது.

west-indies-v-south-africa-called-off-due-to-heavy-rain-at-womens-t20-world-cup
west-indies-v-south-africa-called-off-due-to-heavy-rain-at-womens-t20-world-cup

2020ஆம் ஆண்டுக்கான மகளிர் டி20 கிரிக்கெட் உலகக்கோப்பைத் தொடர் நடந்துவருகிறது. இதன் கடைசி லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்க அணிகள் மோதவிருந்தன. ஆனால் ஆட்டம் தொடங்குவதற்கு முன்னதாகவே கடும் மழை பெய்தது.

மழையால் ரத்தான கடைசி லீக் போட்டி

தொடர்ந்து மழை பெய்ததால் இந்த அணிகளுக்கு இடையிலான போட்டி டாஸ் போடாமலேயே ரத்து செய்யப்பட்டது. இந்தப் போட்டி ரத்து செய்யப்பட்டதால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இதனால் குரூப் பி பிரிவில் தென் ஆப்பிரிக்க அணி 7 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தது.

தென் ஆப்பிரிக்க அணி முதலிடம் பிடித்ததால் நாளை மறுநாள் நடக்கவுள்ள அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:மகளிர் டி20 உலகக்கோப்பை: அரையிறுதியில் இங்கிலாந்தை எதிர்கொள்ளும் இந்தியா!

ABOUT THE AUTHOR

...view details