ETV Bharat / sports

மகளிர் டி20 உலகக்கோப்பை: அரையிறுதியில் இங்கிலாந்தை எதிர்கொள்ளும் இந்தியா!

author img

By

Published : Mar 3, 2020, 8:40 PM IST

மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரில் நாளை மறுநாள் நடக்கவுள்ள அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி இங்கிலாந்தையும், தென் ஆப்பிரிக்க அணி ஆஸ்திரேலியாவையும் எதிர்கொள்ளவுள்ளது.

womens-t20-wc-india-take-on-england-aus-face-sa-in-semis
womens-t20-wc-india-take-on-england-aus-face-sa-in-semis

ஆஸ்திரேலியாவில் நடந்துவரும் மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடர் அரையிறுதியை எட்டியுள்ளது. இந்த அரையிறுதி சுற்றுக்கு ஏ பிரிவில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளும் பி பிரிவில் இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகளும் முன்னேறின.

லீக் சுற்றுகள் இன்றோடு முடிவடைந்த நிலையில் அரையிறுதியில் எந்த அணி யாரை எதிர்கொள்கிறது என்ற விவரங்கள் ரசிகர்களுக்கு அறிவிக்கப்படாமல் இருந்தது. தற்போது அரையிறுதியில் மோதும் அணிகள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதில் வலிமை வாய்ந்த இங்கிலாந்து அணியை இந்தியாவும், டிஃபெண்டிங் சாம்பியன் ஆஸ்திரேலியாவை தென் ஆப்பிரிக்க அணியும் எதிர்கொள்ளவுள்ளன.

  • The #T20WorldCup semi-final draw:

    3pm local time: 🇮🇳 v 🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿
    7pm local time: 🇿🇦 v 🇦🇺

    Who are you backing to make it to the final? pic.twitter.com/ar3vcAI7Re

    — T20 World Cup (@T20WorldCup) March 3, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இந்த அரையிறுதிப் போட்டியின் மூலம் 2017ஆம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி இங்கிலாந்திடம் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணியில் ஷஃபாலி வர்மா, ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஆகியோர் நல்ல ஃபார்மில் இருந்தாலும், இங்கிலாந்து அணியில் நடாலி, கேப்டன் ஹெதர் நைட் ஆகியோர் அபாரமான ஃபார்மில் உள்ளனர். சமபலம் கொண்ட இரு அணிகள் அரையிறுதி மோதும் ஆட்டம் சர்வதேச கிரிக்கெட் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: அச்சமின்றி விளாசும் ஷஃபாலி வர்மா... புகழும் பிரெட் லீ!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.