தமிழ்நாடு

tamil nadu

விராட் கோலியை நம்பியே இந்திய அணி உள்ளது: கோலியின் பயிற்சியாளர்!

By

Published : Mar 2, 2020, 11:28 PM IST

மும்பை: இந்திய அணி விராட் கோலியின் பேட்டிங்கை நம்பியே உள்ளதாக அவரது சிறுவயது பயிற்சியாளர் ராஜ்குமார் ஷர்மா தெரிவித்துள்ளார்.

team-has-become-dependent-on-kohli-rajkumar-sharma-after-new-zealand-sweep-test-series
team-has-become-dependent-on-kohli-rajkumar-sharma-after-new-zealand-sweep-test-series

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் இழந்துள்ள நிலையில், விராட் கோலியின் பேட்டிங் மீது சரமாரியாக விமர்சனங்கள் வருகிறது. இதுகுறித்து விராட் கோலியின் சிறுவயது பயிற்சியாளரான ராஜ்குமார் ஷர்மா பேசுகையில், '' நியூசிலாந்து தொடர் விராட் கோலிக்கு சரியாக அமையவில்லை. இந்திய அணி முழுக்க முழுக்க விராட் கோலியை மட்டுமே நம்பி உள்ளது. இதனால் விராட் கோலி மீது அதிக அளவில் ப்ரஷர் போடப்படுகிறது. மற்ற வீரர்களும் பொறுப்பேற்றுக் கொண்டு சிறப்பாக விளையாட வேண்டும்.

அதேபோல் நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் சரியான திட்டமிடலுடன் சிறப்பாக பந்துவீசினர். ஒவ்வொரு போட்டிக்கு முன்னதாகவும் அவர்கள் அனைத்து வீரர்களுக்கும் சரியான திட்டத்துடன் களமிறங்கி அந்தத் திட்டத்தை செயல்படுத்தியதுதான் நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம்'' என்றார். இந்தத் தொடரில் விராட் கோலி 38 ரன்கள் மட்டுமே எடுத்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:நியூசிலாந்து தொடர்: விராட் கோலியைவிட அதிக ரன்கள் எடுத்த முகமது ஷமி!

ABOUT THE AUTHOR

...view details