தமிழ்நாடு

tamil nadu

‘எனக்கு எதிராகப் பேச யுவராஜ், ஹர்பஜன் கட்டாயப்படுத்தப் பட்டுள்ளார்கள்’ - அப்ரிடி

By

Published : May 27, 2020, 8:54 PM IST

இந்திய வீரர்கள் யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங் ஆகியோர் தனக்கு எதிராகப் பேசுவதற்கு கட்டாயப்படுத்தப் பட்டுள்ளார்கள் என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் அப்ரிடி தெரிவித்துள்ளார்.

shahid-afridi-feels-harbhajan-yuvraj-are-majboor-to-react-against-him
shahid-afridi-feels-harbhajan-yuvraj-are-majboor-to-react-against-him

கரோனா வைரஸ் பாதிப்பை சரிசெய்ய உதவுவதற்காக பாகிஸ்தான் வீரர் அப்ரிடி நடத்தும் அறக்கட்டளைக்கு இந்திய வீரர்கள் யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங் ஆகியோர் நிதியுதவி செய்தனர்.

இதையடுத்து பாகிஸ்தான் வீரர் அப்ரிடி இந்தியாவைப் பற்றியும், இந்திய பிரதமர் பற்றியும் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வீடியோ வெளியாகியது. இதற்கு இந்திய வீரர்கள் பலரும் எதிர்வினையாற்றினர்.

யுவராஜ் சிங்

இதுகுறித்து தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அப்ரிடி பேசுகையில், ''எனது அறக்கட்டளைக்கு உதவி செய்ததற்காக யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங் ஆகியோருக்கு வாழ்நாள் முழுக்க கடமைப்பட்டுள்ளேன். அவர்கள் எனக்கு எதிராகப் பேசுவதற்கு கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார்கள். இந்தியாவில் மக்கள் ஒடுக்கப்படுவது அவர்களுக்கு நன்றாகத் தெரியும். இதைப்பற்றி மேலும் கருத்து கூற விரும்பவில்லை'' என்றார். அப்ரிடியின் இந்தப் பேச்சு மீண்டும் இந்திய வீரர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:25ஆவது திருமண நாளன்று தனது குடும்பத்தினருக்கு சர்ப்ரைஸ் தந்த சச்சின்!

ABOUT THE AUTHOR

...view details