ETV Bharat / sports

25ஆவது திருமண நாளன்று தனது குடும்பத்தினருக்கு சர்ப்ரைஸ் தந்த சச்சின்!

author img

By

Published : May 26, 2020, 7:33 PM IST

மும்பை: தனது 25ஆவது திருமண நாளை இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மாம்பழ குல்ஃபி செய்து குடும்பத்தினருக்கு சர்ப்ரைஸ் தந்துள்ளார்.

WATCH: Sachin Tendulkar makes mango kulfi on his 25th marriage anniversary
WATCH: Sachin Tendulkar makes mango kulfi on his 25th marriage anniversary

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் 1989 முதல் 2013 வரை கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். ரசிகர்களால் கிரிக்கெட்டின் கடவுள் என அழைக்கப்படும் இவருக்கும் அஞ்சலிக்கும் மே 25, 1995இல் திருமணமானது. இந்த தம்பதிக்கு சாரா டெண்டுல்கர் என்ற மகளும், அர்ஜூன் டெண்டுல்கர் என்ற மகனும் உள்ளனர்.

இந்த நிலையில், இவர்களுக்கு திருமணமாகி நேற்றொடு 25 ஆண்டுகள் நிறைவடைந்தன. இதைக் கொண்டாடும் விதமாக, சச்சின் நேற்று தனது குடும்பத்தினருக்கு தன் கையால் தயார் செய்த மாம்பழ குல்ஃபி செய்து சர்ப்ரைஸ் தந்தார். தனது 25ஆவது திருமண நாளன்று மாம்பழ குல்ஃபி செய்யும் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. முன்னதாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் தனது மகன் அர்ஜூனுக்கு வீட்டிலேயே சிகை திருத்தம் செய்யும் வீடியோவையும் சச்சின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சச்சினை 8 வயதில் சந்தித்தேன்... நினைவு பகிரும் ப்ரித்வி ஷா...!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.