தமிழ்நாடு

tamil nadu

பாகிஸ்ங் டே டெஸ்ட்: டூ பிளெசிஸ், பவுமா நிதான ஆட்டம்!

By

Published : Dec 28, 2020, 7:36 AM IST

தென் ஆப்பிரிக்கா - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 4 விக்கெட் இழப்பிற்கு 317 ரன்களை எடுத்துள்ளது.

SA vs SL, 1st Test: Openers, du Plessis put SA on top
SA vs SL, 1st Test: Openers, du Plessis put SA on top

தென் அப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இலங்கை அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிவருகிறது. இதில் நேற்று முந்தினம் தொடங்கிய முதலாவது டெஸ்ட் போட்டியில் (பாக்ஸிங் டே) டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.

அதன்படி தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இலங்கை அணியில் சண்டிமால், தனஞ்செய, ஷானகா ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதனால் இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 396 ரன்களை எடுத்தது.

இதையடுத்து நேற்று இரண்டாம் நாள் ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கும் டீன் எல்கர் - மார்க்ரம் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அடித்தளம் அமைத்துக் கொடுத்தது. இருவரும் அரைசதம் கடந்தும் அசத்தினர்.

அதன்பின் 68 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மார்க்ரம் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து வந்த வேண்டர் டௌசனும் 15 ரன்னில் பெவிலியன் திரும்பினார். மறுமுனையில் சிறப்பாக விளையாடிவந்த டீன் எல்கர் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 95 ரன்களில் ஆட்டமிழந்து, சதமடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார்.

பின்னர் டூ பிளேசிஸுடன் ஜோடி சேர்ந்த கேப்டன் டி காக் 18 ரன்களில் நடையைக் கட்டினார். இதனால் தென் ஆப்பிரிக்க அணி 220 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதையடுத்து பாப் டூ பிளேசிஸுடன் இணைந்த டெம்பா பவுமா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணி விக்கெட் இழப்பைத் தடுத்தார்.

இதில் பாப் டூ பிளேசிஸ் அரைசதம் கடந்தார். இதன்மூலம் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி தனது முதல் இன்னிங்ஸில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 317 ரன்களை எடுத்தது. அந்த அணியில் பாப் டூ பிளேசிஸ் 55 ரன்களுடனும், டெம்பா பவுமா 41 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

இதனால் முதல் இன்னிங்ஸில் 79 ரன்கள் பின்தங்கிய நிலையில் தென் ஆப்பிரிக்க அணி இன்று மூன்றாம் நாள் ஆட்டத்தைத் தொடரவுள்ளது.

இதையும் படிங்க:ஐஎஸ்எல்: முதல் வெற்றியைப் பதிவுசெய்தது கேரளா பிளாஸ்டர்ஸ்!

ABOUT THE AUTHOR

...view details