தமிழ்நாடு

tamil nadu

ஸ்டீவ் ஸ்மித்தை அச்சுறுத்திய நைல் வாக்னர் விலகல்... நிம்மதி பெருமூச்சு விட்ட இந்தியா

By

Published : Feb 19, 2020, 2:04 PM IST

தந்தையாகும் மகிழ்ச்சியில் நியூசிலாந்து பந்துவீச்சாளர் நைல் வாக்னர் இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியிலிருந்து விலகியுள்ளார்.

NZ vs IND: Wagner ruled out of first Test, Henry called in as replacement
NZ vs IND: Wagner ruled out of first Test, Henry called in as replacement

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நாளை மறுநாள் வெலிங்டனில் தொடங்கவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றனர். இந்த நிலையில், இப்போட்டியிலிருந்து நியூசிலாந்து அணியின் இடதுகை பந்துவீச்சாளர் நைல் வாக்னர் விலகியுள்ளார்.

நைல் வாக்னர்

அவருக்கும் அவரது மனைவி லானாவுக்கும் முதல் குழந்தை இந்த வாரத்தின் இறுதியில் பிறக்கவுள்ளதால், நைல் வாக்னர் இப்போட்டியில் பங்கேற்கமாட்டார் எனவும், குழந்தை பிறக்கும் வரை அவர் தவுரங்காவில் இருப்பார் எனவும் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. அவருக்குப் பதிலாக மேட் ஹென்றி அணியில் மாற்றுவீரராகச் சேர்க்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவித்துள்ளது. 33 வயதான நைல் வாக்னர் நியூசிலாந்து அணிக்காக இதுவரை 46 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 204 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இவர் தொடர்ந்து நான்கு இன்னிங்ஸிலும் ஸ்டீவ் ஸ்மித்தை ஆட்டமிழக்கச் செய்ததால், கோலிக்கும் இவர் பெரும் தலைவலியாக இருப்பார் எனக் கூறப்பட்டது. ஆனால், தற்போது அவர் முதல் டெஸ்ட் போட்டியிலிருந்து விலகியது, கோலிக்கும் இந்திய அணிக்கும் சாதகமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:கோலியை வீழ்த்தவே கிரிக்கெட் விளையாடுகிறேன் - டிரெண்ட் போல்ட்

ABOUT THE AUTHOR

...view details