தமிழ்நாடு

tamil nadu

கணவரை ட்ரோல் செய்தவரின் வாயை அடைத்த மயாந்தி லாங்கர்!

By

Published : Feb 8, 2020, 5:36 PM IST

இந்தியாவின் பிரபல தொலைக்காட்சி வர்ணனையாளரான மயாந்தி லாங்கர், தனது கணவர் ஸ்டூவர்ட் பின்னியை விட்டு கொடுக்காமல் அவருக்கு துணை நிற்கிறார் என சமூக வலைதளவாசிகளின் பாராட்டுக்குள்ளாகியுள்ளார்.

Mayanti Lange
Mayanti Lange

இந்தியாவின் பிரபல விளையாட்டுப் போட்டிகளை ஒளிபரப்பும் தொலைக்காட்சியின் வர்ணனையாளரும், இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஸ்டூவர்ட் பின்னியின் மனைவியுமானவர் மயாந்தி லாங்கர்.

இவர் சமூக வலைதளங்களில் அதிக விமர்சனத்திற்கு உள்ளாகும் நபர்களின் பட்டியலிலும் இடம்பிடித்தவர். இந்நிலையில் இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியின்போது தொலைக்காட்சி ஸ்டூடியோவில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டார் லாங்கர்.

இதனைக் கண்ட ரசிகர்கள் அவரின் கமண்ட் பாக்ஸில் தங்களது கருத்துகளைத் தெரிவித்து வந்தனர். அதில் ஒரு நபர் “உங்களது கணவர் ஸ்டூவர்ட் பின்னி எங்குள்ளார்..? அவர் இருந்திருந்தால் உங்களது பெட்டிகளைத் தூக்க வசதியாக இருந்திருக்கும் ” என பதிவிட்டார்.

அதற்கு பதிலளித்த லாங்கர், “என்னுடைய பெட்டிகளை என்னால் தூக்கி செல்ல இயலும். ஆதலால் தாங்கள் அதனைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை. மேலும் பின்னி அவருடைய வாழ்க்கை மற்றும் கிரிக்கெட் விளையாடுவதில் பிஸியாக இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் அவருக்கு வழிப்போக்கர்களின் விமர்சனங்களை கேட்க நேரம் கிடையாது” என பதிலளித்தார்.

இதனையடுத்து கணவரை விட்டுகொடுக்காமல் அவருக்கு துணை நிற்கிறார் என அவரை நெட்டிசன்கள் புகழந்துள்ளனர்.

இந்திய அணியின் ஆல்ரவுண்டராக வலம் வந்த ஸ்டூவர்ட் பின்னி கடைசியாக இந்திய அணிக்கு 2016ஆம் ஆண்டு நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான டி20 தொடரில் பங்கேற்றிருந்ததார். அதனைத் தொடர்ந்து அவர் தற்போது நாகாலாந்து ரஞ்சி அணிக்காக இந்த சீசனில் விளையாடி வருகிறார். மேலும் இந்தாண்டு ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் இவரை எந்த அணியும் வாங்க முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:வீணில் முடிந்த ஜடேஜாவின் போராட்டம்... தொடரை இழந்த கோலி அண்ட் கோ!

Intro:Body:

https://www.etvbharat.com/english/national/sports/cricket/cricket-top-news/mayanti-langer-gives-befitting-reply-to-troll-for-asking-about-stuart-binny/na20200206232328746


Conclusion:

ABOUT THE AUTHOR

...view details