தமிழ்நாடு

tamil nadu

”என் நண்பனை இழந்துவிட்டேன்” - பாக். பிரதமர் இம்ரான் கான் உருக்கம்

By

Published : Sep 7, 2019, 7:03 PM IST

தன்னுடைய சிறந்த நண்பனை இழந்துவிட்டதாக கிரிக்கெட் வீரர் அப்துல் காதிரின் மறைவிற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார்.

அப்துல் காதிர்

1970 -1980ஆம் ஆண்டுகளுக்கிடைப்பட்ட காலத்தில் வேகப் பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தினாலும், பாகிஸ்தான் அணியின் அப்துல் காதிருடைய தனித்துவமான சுழற்பந்துவீச்சு (லெக் ஸ்பின்) முறை அனைவரையும் ஈர்த்தது. அக்காலத்தில் பாகிஸ்தான் அணியின் சிறந்த பந்துவீச்சாளராக திகழ்ந்த இவர், 67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 236 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இவர் டெஸ்ட் போட்டிகளில் 15 முறை ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. அபாரமான பந்துவீச்சாளரான இவரை ‘ மாஸ்ட்டிரோ வித் தி பால்’ (maestro with the ball) என்றழைத்தனர்.

அப்துல் காதிர்

1983, 1987 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணிக்காக விளையாடினார். 1977இல் தொடங்கி 1993ஆம் ஆண்டு வரை சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய இவர், இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் 30 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். சில போட்டிகளில் கேப்டனாக பணியாற்றினாலும் அது அவருக்கு கைகொடுக்கவில்லை என்றே சொல்லலாம். கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றாலும் பாகிஸ்தான் அணி வீரர்களை தேர்வு செய்யும் குழுவின் தலைவராக இருந்தார். 2009ஆம் ஆண்டில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பையை வென்ற பாகிஸ்தான் அணியை இவர்தான் தேர்வு செய்தார்.

அப்துல் காதிர்

இந்நிலையில், அப்துல் காதிர் (63) திடீரென மாரடைப்பால் நேற்று காலமானார். வருகின்ற செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி தன்னுடைய 64ஆவது பிறந்தநாளை கொண்டாட இருந்த அப்துலின் மறைவு கிரிக்கெட் உலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிரிக்கெட் வீரர்கள் பலரும் இவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அப்துல் காதிர்

பாகிஸ்தான் பிரதமரும், முன்னாள் கேப்டனுமான இம்ரான் கானும் தன்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். இம்ரான் கான் கேப்டன்சியில் விளையாடிய அப்துல் காதிர், பல போட்டிகளில் சிறப்பாக பந்துவீசி வெற்றிகளை தேடித் தந்தார். அதேபோல், அப்துல் காதிரின் கேப்டன்சியில் இம்ரான் கானும் முக்கியமான வீரராக இருந்தார்.

இம்ரான் கான் - அப்துல் காதிர்

அவர் நினைவாக இம்ரான் கான், “சிறந்த கிரிக்கெட் வீரரான அப்துல் காதிர் நாட்டுக்காக பல சாதனைகளை செய்தார். அவர் புத்திசாலித்தனமாக பந்துவீசும் சிறந்த பந்துவீச்சாளர் ஆவார். நாங்கள் இருவரும் பாகிஸ்தான் அணிக்காக விளையாடியபோது ஓய்வறையில் தன்னுடைய நகைச்சுவையால் எப்போதுமே அணி வீரர்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வார். அப்படிபட்ட சிறந்த நண்பனை நான் இழந்துவிட்டேன். அவரின் இழப்பு மிகவும் வருத்தமளிக்கிறது” என்று உருக்கமாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Intro:Body:Conclusion:

ABOUT THE AUTHOR

...view details