தமிழ்நாடு

tamil nadu

ஐபிஎல்2021: 'வாத்தி கம்மிங்' பாடலுக்கு நடனமாடிய ஹர்பஜன் சிங்!

By

Published : Mar 30, 2021, 6:10 PM IST

இந்தியச் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், விளையாட்டு நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஜட்டின் சப்ரூவுடன் 'வாத்தி கம்மிங்' பாடலுக்கு நடனமாடும் காணொலி தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது.

harbhajan
harbhajan

இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரராகவும், சுழற்பந்து வீச்சாளராகவும் திகழ்ந்தவர் ஹர்பஜன் சிங். இவர், 2018ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் வீரர்கள் ஏலத்தின்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார். அந்தச் சீசனின் தவிர்க்க முடியாத வீரராக வலம்வந்த ஹர்பஜன் சிங், தமிழ் மொழியின் மீது கொண்ட பற்றின் காரணமாக, ஒவ்வொரு போட்டியின்போதும் தமிழில் ட்வீட் செய்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

இதன் காரணமாக, ரசிகர்கள் ‘தமிழ்ப் புலவர்’ என்ற புனைப்பெயரையும் ஹர்பஜன் சிங்கிற்குச் சூட்டினர். இந்நிலையில் 2020ஆம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசனில், தனிப்பட்ட காரணங்களால் ஹர்பஜன் சிங் விலகினார். அந்தச் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் தொடர் வரலாற்றில் முதல்முறையாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியாமல், லீக் போட்டிகளோடு தொடரிலிருந்து விலகியது.

சிஎஸ்கே அணியுடனான தனது இரண்டு ஆண்டு கால ஒப்பந்தம் இந்தாண்டோடு முடிவடைந்ததையடுத்து இந்தச் சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் சேர்ந்து விளையாட இருக்கிறார். இந்தாண்டு ஐபில் சீசன் ஏப்ரல் 9ஆம் தேதிமுதல் தொடங்குகிறது.

இந்நிலையில், ஐபிஎல் சீசனை வரவேற்கும்விதமாக ஹர்பஜன் சிங், விளையாட்டு நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஜட்டின் சப்ரூவுடன் 'வாத்தி கம்மிங்' பாடலுக்கு நடனமாடும் காணொலியைத் தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்தக் காணொலி தற்போது வைரலாகிவருகிறது.

ABOUT THE AUTHOR

...view details