தமிழ்நாடு

tamil nadu

நான்காவது டெஸ்டிலிருந்து பும்ரா விலகல்!

By

Published : Feb 27, 2021, 10:34 PM IST

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியிலிருந்து வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா விலகியுள்ளார்.

Bumrah unavailable for fourth Test due to personal reasons
Bumrah unavailable for fourth Test due to personal reasons

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றுவருகிறது. முன்னதாக நடைபெற்ற மூன்ற டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்று 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி விளையாட்டரங்கில் மார்ச் 4ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் வலைபயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தனிப்பட்ட காரணங்களுக்காக, இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியிலிருந்து விலகியுள்ளார். இதனை பிசிசிஐ உறுதிசெய்துள்ளது.

இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்ட அறிவிப்பில், "தனிப்பட்ட காரணங்களுக்காக நான்காவது டெஸ்ட் போட்டியிலிருந்து தன்னை விலக்குமாறு ஜஸ்பிரித் பும்ரா பிசிசிஐயிடம் கேட்டுக்கொண்டதையடுத்து, அவருக்கு நான்காவது டெஸ்ட் போட்டியில் ஓய்வளிக்கப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இங்கிலாந்து அணியுடனான டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளிலிருந்து ஜஸ்பிரித் பும்ராவிற்கு ஓய்வளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனால் நான்காவது டெஸ்ட் போட்டியில் காயத்திலிருந்து மீண்டுள்ள உமேஷ் யாதவ் அணியில் சேர்பதற்கு வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க:ஹிட்மேன் சாதனையை முறியடித்த கப்தில்!

ABOUT THE AUTHOR

...view details